திங்கள், 20 அக்டோபர், 2014

கமலினி முகர்ஜி :மீண்டும் மீண்டும் கமெராக்கள் ஆணை சுற்றியே ஓடுகிறது !

ஹீரோயின்களுக்கு படங்களில் முக்கியத்துவம் தருவதில்லை என்றார் கமாலினி முகர்ஜி.‘வேட்டையாடு விளையாடு, ‘காதல்னா சும்மா இல்ல ஆகிய படங்களில் நடித்திருப்பவர் கமாலினி முகர்ஜி. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். எதற்கும் அதிர்ந்து பேசாமல் அமைதியாகவே எல்லாவற்றையும் அணுகும் குணம் கொண்டவர். பேட்டி அளிக்கும்போதும் யார் மனதையும் புண்படுத்தாமல் பக்குவமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுபவர். சக ஹீரோயின்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு வரும் பட வாய்ப்பு மிக குறைவு. அவரை சந்திப்பவர்கள், ‘அதிக படங்களில் நடிக்காதது ஏன்? என்று கேட்கின்றனர். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பூனைபோல் அமைதியாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென புலியாக மாறி சீறத் தொடங்கினார்.
‘நல்ல கதாபாத்திரங்கள் வந்தால்தான் நான் நடிக்கிறேன். பிடிக்காததால் பல வேடங்களை ஏற்க மறுத்துவிடுகிறேன். ஹீரோயின்களுக்கு எந்த படத்திலும் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால்தான் அதிக படங்களில் நடிப்பதில்லை என்றார். இவரது திடீர் பாய்ச்சல் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக