சனி, 4 அக்டோபர், 2014

அதிமுக மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக ஆயத்தம் !

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் குறிப்பாக, இரண்டு விஷயங்களை முன்வைத்து அவர்கள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். சொத்து குவிப்பு வழக்கை முன்னின்று நடத்திய தி.மு.க.,வுக்கு எதிராகவும், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவுக்கு எதிராகவும், கடுமையான வாசகங்களுடன் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சென்னை மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும், இந்த தீர்ப்பை கண்டித்து, தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதிலும், கருணாநிதியையும், நீதிபதி குன்ஹாவையும் விமர்சித்து இருக்கின்றனர்.
திரட்டுகின்றனர்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி யாக இருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த மாதிரி விமர்சனங்களை ஆதாரத்துடன் சேகரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.  பத்திரிக்கைகள் உண்மையாக தமிழினம் மீது பற்றுள்ளவர்களாக இருந்தால் நீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரத்தை சொல்லவேண்டும். சொன்னால் மட்டும் போதாது - விவாதிக்கவேண்டும். ஏன் இந்த தண்டனை என்பது புரியும்....
அதை வைத்து, விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர, தி.மு.க., தரப்பில் தயாராகி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.,வினர், ஆங்காங்கே, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் அ.தி.மு.க.,வினரின் போராட்டங்களையும், போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுபவர்களின் பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர். சென்னை மற்றும் வேலூர் மாநகராட்சிகளின் தீர்மான நகல்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்ற விவரங்கள், பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமியின் ஆதர வாளர்களாலும் திரட்டப்பட்டு வருகின்றன.

களங்கம் கற்பிப்பு:

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுவதாவது: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சட்டத்தின் அடிப்படையில் தான், தீர்ப்பு எழுதி இருக்கிறார். தீர்ப்பை எதிர்கொள்வதில் தயக்கம் இருந்தால், அதை, சட்டரீதியாகத் தான், அ.தி.மு.க.,வினர் எதிர்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நீதிபதிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். கூடவே, தி.மு.க.,வையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது நீதிமன்றத்தின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் செயல் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர இருக்கிறோம். அதற்காக, அனைத்து ஆவணங்களும், பதிவுகளும் தி.மு.க.,வினரால் சேகரிக்கப்படுகின்றன. சென்னை முழுவதும், கருணாநிதியை கருநாகம் என்று சொல்லி, போஸ்டர் அச்சிட்டு ஒட்டியிருக்கிறார், ஸ்டார் குணசேகரன் என்ற கவுன்சிலர். அதில், 'நிதியும் நீதியும் சேர்ந்து, இழைத்த அநீதி என்றும், நிலையான தீர்ப்பு அல்ல; பிழையான தீர்ப்பு' என்றெல்லாம் இஷ்டத்துக்கும் வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

போஸ்டர்கள்:

அந்த போஸ்டரில் அச்சாகி இருக்கும் வாசகங்கள் அனைத்துமே, நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகக் கூடியவை. இதே மாதிரி ஏராளமான போஸ்டர் கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த விவகார மும் அ.தி.மு.க.,வுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு, அந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக