சனி, 4 அக்டோபர், 2014

ஆட்சியில் இருக்கும் அதிமுகவே தமிழகத்தில் அசம்பாவிதம் பதற்றம் என ஒப்புதல் வாக்குமூலம் ?

இந்த வழக்கில், நீதிபதியிடம் குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புகொண்டது போல, அதற்கு பின் ஓரிரு நாட்களில் மம்மிஜிக்காக அவரின் அதிகாரபூர்வ வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுவிலேயே.. இவர்களின் கேடுகெட்ட இந்த ஆட்சியில், தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதையும் அதற்கு முழு காரணமும், மூளை மழுங்கிய உணர்ச்சி வசப்பட்ட அதிமுக கட்சிகாரர்கள் தான் என்பதையும் ஒப்பு கொண்டுவிட்டனர். இன்னும் சொல்ல போனால் எழுதியே கொடுத்து விட்டனர். அவர்கள் அந்த மனுவில் நிலைமையை மேலும் மோசமாக்குவோம் என்று எச்சரிக்கையும் விட்டிருந்தனர்.. அந்த மனுவில் குறிப்பிட பட்டதாவது: "ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அவசியம். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வன்முறையும், தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.தற்போது, தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதமானால், அசம்பாவிதம் நேரிடும்..." ஆகையால், மத்திய உளவு துறை அந்த ஜாமீன் மனுவை அவர்களின் வாக்குமூலமாகவே எடுத்து கொள்ளலாம். இப்படி ஒரு கட்சியை லோகத்தில பாக்கவே முடியாது.. யாரோட ஆட்சி நடக்குதுன்றதையே மறந்துட்டானுங்க போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக