செவ்வாய், 14 அக்டோபர், 2014

பெங்களூருவில் அதிமுகவினர் இன்னும் முகாமிட்டு இருப்பதன் ரகசியம் அம்பலம் ! சசிமூலம் காய்கள் நகர்கின்றன !

ஜெயலலிதா சிறையில் இருப்பதுடன், கட்சியினரை சந்திக்க மறுத்து வருவதால், யார் சொல்லை கேட்பது; யாரை கேட்டு முடிவு எடுப்பது என்பது தெரியாமல், அமைச்சர்கள் உள்ளிட்ட, ஆளுங்கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கத்துடன், சசிகலா சொந்தங்கள் பெங்களூருவில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.
மீண்டும் சர்ச்சை: சிறைக்கு வர வேண்டாம் என்று, ஜெயலலிதா தடை போட்ட பிறகும், அமைச்சர்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்களும் பெங்களூரு செல்வது, சசிகலாவை சந்திப்பற்காக தான், என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது, கட்சியில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருவதாக, ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதா, யாரையும் சந்திப்பதில்லை. தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும், தடை விதித்துள்ளார். ஆனாலும், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என, பலரும் அங்கே படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஜெயா சசிகலாவை கொள்ளை  சொத்துக்களுக்கு பினாமியாக நியமித்தார்  இப்போ  அரசியல்லுக்கும் சசியே பினாமி ஆகிவிட்டார்.  


இதற்கு என்ன காரணம்? இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்ற விவாதம், அ.தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று முன்தினம், ஞாயிறு விடுமுறை என்பதால், சிறையில் பார்வையாளர்களுக்கு, அனுமதி கிடையாது. ஆனாலும், அமைச்சர்கள் சிலர், பெங்களூரு சென்றுள்ளனர். இவர்கள் யாரை சந்திப்பதற்காக, அங்கே சென்றனர்?

இந்த கேள்வி குறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள் வருமாறு: அ.தி.மு.க.,வில் செல்வாக்குடன் திகழ்ந்த, சசிகலாவின் உறவினர்கள் இப்போது ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். அவர்களுடன், எந்த தொடர்பும், கட்சியினருக்கு இல்லாமல்இருந்தது. தற்போது, அந்த நிலைமை மாறி வருகிறது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரது கருத்தை அமைச்சர்களால், அறிய முடியவில்லை. சசிகலா மூலமாக தான், அறிந்து கொள்கின்றனர். இங்கிருந்து செல்லும் அமைச்சர்கள், ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்பதால், எந்த முடிவாக இருந்தாலும், சசிகலாவை கேட்டுத்தான் செய்ய வேண்டி உள்ளது.

அடிக்கடி சந்திப்பு...:
கட்சியை விட்டு நீக்கப்பட்ட, சசிகலாவின் உறவினர்கள், பெங்களூருவில் தங்கி இருந்தாலும், அவர்களாலும் ஜெயலலிதாவை சந்திக்க
முடியவில்லை. ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்காக, அவர்கள் பெங்களூருவில் தங்கியிருப்பதாக கூறுகின்றனர். இவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் தெரிய வந்துள்ளது.ஆனாலும், இவர்கள் சிறை வாசலில் காத்திருப்பதில்லை. ஓட்டல் அறைகளில் தங்கியிருந்தபடியே, காய் நகர்த்துகின்றனர். ஜெயலலிதா சிறை சென்றதும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.அப்போதே, இவர்களதுதலையீடு துவங்கி விட்டது. ஆனால், இந்த விஷயத்தில் ஜெயலலிதா உறுதியாக இருந்ததன் விளைவு தான், ஓ.பி.எஸ்., முதல்வரானார். இல்லையேல், வேறு ஒருவர், அந்த நாற்காலியில் அமர்ந்திருப்பார். இன்னும் அந்த முயற்சியை, அவர்கள் கைவிட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், மீண்டும் பதவிக்கு வர முயற்சிக்கும் மாஜிக்கள், அமைச்சராக துடிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், பதவியை தக்க வைக்க முயலும் அமைச்சர்கள் என, பல தரப்பும், அடிக்கடி பெங்களூரு செல்வதும், வருவதுமாக இருப்பதற்கு காரணமே, இவர்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக