வியாழன், 23 அக்டோபர், 2014

மம்தா பானர்ஜி :மதவாத சக்திகளை சகிக்க மாட்டேன் !

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மதவாத சக்திகள் பதற்றத்தை கிளப்ப முயற்சிப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார். மதவாத சக்திகள் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தென் கொல்கத்தாவில் நடந்த காளி பூஜையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மேற்கு வங்காளத்தில் சில மதவாத சக்திகள் பதற்றத்தை கிளப்ப முயற்சிக்கின்றன.
அவர்களுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். மேலும், இங்கு வணிகர்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களை பாதுகாக்க எனது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். மதவாத சக்திகளின் முயற்சிகளை சகித்து கொண்டிருக்க மாட்டேன். மக்களுக்காக உழைப்பேன். மேலும், நான் மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். அவர்களின் பாதுகாவலனாக செயல்படுவேன். மதவாத சக்திகளுடன் விளையாடுவது என்பது நெருப்புடன் விளையாடுவதை போன்றது. மத கலவரங்களுக்கு நான் அஞ்சுகிறேன். அரசியல் தீயை விட மதவாத தீ மிகவும் ஆபத்தானது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக