திங்கள், 27 அக்டோபர், 2014

பால் விலையை உயர்வை குறைக்க சரத்குமாரும் கோரிக்கை?

நடிகரும் சரத்குமார் MLA :தமிழக அரசு, ஏழை, நடுத்தர மக்கள் நலன் கருதி, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு என்பதை மறுபரிசீலனை செய்து முடிந்தவரை விலை உயர்வை குறைத்திட வேண்டும்!
 தமிழகத்தில் ஆவின் பால் விலை தனியார் பால் விற்பனை விலையைவிட சராசரியாக சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், கொழுப்பு நிறைந்த பால் என அனைத்து வகைகளிலும் லிட்டருக்கு ரூபாய் 10 குறைவாகவே இருந்து வருகிறது. தனியார் பால் விற்பனையை விலையை விட, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10, குறைவாக இருந்ததால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை தமிழக அரசு அதிகரித்து கொடுக்க இயலவில்லை.


இந்த நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 22.5 லட்சம் விவசாயிகளுக்கு பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் உயர்த்திக் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது, அரசு லிட்டருக்கு சராசரியாக அனைத்து வகை பாலுக்கும் 10 ரூபாய் உயர்த்திய பிறகு கூட தனியார் பால் விற்பனை விலை கூடுதலாகத்தான் இருக்கிறது.

இருப்பினும் கடந்த தி.மு.க அரசு விட்டுச்சென்ற கடுமையான நிதி நெருக்கடியிலும், அவற்றை சமாளித்து மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்து வரும் தமிழக அரசு, ஏழை, நடுத்தர மக்கள் நலன் கருதி, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு என்பதை மறுபரிசீலனை செய்து முடிந்தவரை விலை உயர்வை குறைத்திட வேண்டும். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக