திங்கள், 13 அக்டோபர், 2014

லக்கி ராய் என்று செல்லமாக அழைக்கப்படும் லக்ஷ்மி ராயின் கதவை தட்டும் அதிஷ்ட தேவதை !

மும்பையை சேர்ந்த ஏ.எஸ்.ஏ நிறுவனம், தமிழில் பிரம்மாண்ட செலவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.பிரபல நடிகையான ராய் லக்ஷ்மி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் ராஜாதிராஜா, தமிழில் சுந்தர் சி யுடன் 'அரண்மனை'  என இந்த வருடம் ஹிட் படங்களில் நடித்துள்ள ராய் லக்ஷ்மி, பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் என்றால் அதி மிகையாகாது.பல மலையாள வெற்றி படங்களில் நடித்ததின் மூலம் மாலிவுட்டில் “லக்கி” ராய் என அழைக்கப்படும் ராய் லக்ஷ்மி, அரண்மனையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு அவர் ஒரு பெரிய பலமாக திகழ்வார். இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக