வெள்ளி, 10 அக்டோபர், 2014

நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு விரைவில் ? உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் கண்டுபிடிப்பு !

துபாய்: நீரிழிவு நோயிலிருந்து விடுபட மருந்து வரப்போகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே ஒரு பெரும் ஆனந்தம் தானே ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் முதல் முறையாக அதிக அளவில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலமாக 1 நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டுள்ள இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் லட்சகணக்கானோர் பயன் பெறுவர். இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டவுக் மெல்டன் அவர்களின் 23 ஆண்டு கால ஆராய்ச்சியானது அதன் முடிவை நெருங்கியுள்ளது. பேராசிரியர் டவுக் மெல்டன் மகன் சாம் பிறந்த போது டைப் 1 வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததே அவரின் இந்த ஆராய்ச்சிக்கு காரணம்


வகை 1 நீரிழிவு நோய் என்பது இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் ”இன்சுலின்” எனும் ஹார்மோனை கணையம் உற்பத்தி செய்யமல் தடுத்துவிடுகிறது. மேலும் அவர் கூறியதாவது “இந்த ஆராய்ச்சி தொடர்பான இறுதி கட்டத்தில் உள்ளோம், விரைவில் இது முடிவடையும்”

ஸ்டெம் செல்கள் மூலம்  பெறப்பட்ட இந்த பீட்டா செல்கள் தற்போது மனிதரல்லாத உயிரினங்கள் உட்பட விலங்கு மாதிரிகளில் சோதனை நிலையில் இருந்து வருகின்றன, இந்த பீட்டா செல்கள் பல மாதங்களாகியும் இன்சுலினை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது என பேராசிரியர் மெல்டன் கூறினார்.

பொதுவாக நீரிழிவு நோயினால் பாதிக்கபடுபவர்களில் வகை 1 நீரிழிவு நோயினால் பாதிக்கபடுபவர்களே அதிகம், மேலும் இந்த வகை நீரிழிவு நோய் குழந்தை பருவத்தில் வரும் நீரிழிவில் பொதுவான வகையாகும். நமது இந்த ஆராச்சியின் முடிவு சாதகமாக முடிந்தால் மூலமாக மருத்துவ உலகில் விளையும் பலன் ஏராளமானவை எனவும், லட்சக்கணக்கானோர் இதன் மூலமாக பயன் அடைவர் எனவும் அவர் கூறினார். 'நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் மனித கணைய பீட்டா செல்கள் உருவாக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் ஆராச்சியாளர்கள் பலரும் இந்த கண்டுபிடிப்பினை பராட்டுகின்றனர், இந்த அறிவியல் வளர்ச்சியினை பலரும் ஒரு பெரும் சாதனையாக கருதுகின்றனர். தினகரன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக