சனி, 25 அக்டோபர், 2014

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி செலுத்தவில்லை ! இதுதாண்டா சினிமாக்காரன் !

Shoba, Sarath Babu, Balu Mahendra, J. Mahendran, Rajinikanth and Fatafat Jayalaxmi
 ரஜினி,கமல்,ஷங்கர் என்று பலருடன் பணியாற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.  அவரின் மறைவுக்கு யாருமே அஞ்சலி செலுத்தச்செல்லவில்லை என்பது அவரின் மனைவிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் வேதனை அளிக்கிறதுஒளிப்பதிவாளர் அசோக் குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவருடன் பழகிய நடிகர்கள் யாரும் வராதது வேதனை அளிக்கிறது என்றார் அவரது மனைவி.நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி, வெற்றி விழா, நடிகன், ஜீன்ஸ் என தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அசோக்குமார்.
உடல்நலமில்லாமல் 6 மாதம் படுக்கையில் இருந்த அவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். ஆனால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலகிலிருந்து எந்த நடிகர், நடிகையோ, இயக்குனரோ  வரவில்லை.இதனால் வருத்தம் அடைந்த அசோக்குமார் மனைவி ஜோதி தனது வேதனையை வெளியிட்டார். அவர் கூறும்போது,‘40 வருடமாக அவருடன் வாழ்ந்தோம். அவர் திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது பல நடிகர்கள், இயக்குனர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.வீட்டில் ஏதாவது விழா நடந்தால் அதிலும் கலந்துகொள்வார்கள். ஆனால் அவர் மரணம் அடைந்தபோது ஒருவருமே வரவில்லை. இது எங்களை தனிமையில் ஆழ்த்தி இருக்கிறது' என்றார். மகன் ஆகாஷ் கூறும்போது,‘அப்பாவை(அசோக்குமார்) ரொம்பவே மிஸ் செய்கிறோம். எடிட்டர் லெனின், கேமராமேன் சங்கத்திலிருந்து ரவீந்திரன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மற்றபடி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்' என்றார். nakkheeran,in

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக