புதன், 22 அக்டோபர், 2014

கன்யாகுமரியில் போலி செக்ஸ் ஸ்ப்ரே பாவித்த பலரும் உடல் உபாதையில் !

கன்னியாகுமரியில் போலி செக்ஸ் ஸ்பிரே விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இதை வாங்கி பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களை குறிவைத்து  கடற்கரை பகுதியில் உள்ள 100க்கும் அதிகமான கடைகளில் பாசி மாலைகள், சங்கு பொருட்கள், கலை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ளனர். கடைகள் மட்டுமின்றி கையில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் 500க்கும் அதிகமான வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் இருக்கும் இடத்திற்கே சென்று பேரம் பேசி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் தற்போது ஆண்மையை அதிகரிக்கும் செக்ஸ் ஸ்பிரே என்று கூறி ஒரு வகை ஸ்பிரேயை விற்பனை செய்து வருகிறார்கள்.


வடமாநில மொத்த விற்பனை வியாபாரிகளிடம் இருந்து ரூ.16க்கு கொள்முதல் செய்து சுற்றுலா பயணிகளிடம் ரூ.400, 500 என்று இந்த செக்ஸ் ஸ்பிரேயை விற்பனை செய்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கச்சிதமாக பேசி ரூ.1000க்கு மேல் ஸ்பிரேயை விற்பனை செய்கிறார்கள்.ஆனால் இந்த ஸ்பிரேயை ஆசையுடன் வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவதாகவும், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதன் விற்பனை படு ஜோராக நடைபெறுகிறது. ஆண்களின் ஆசையை தூண்டும், கிளர்ச்சி அடைய செய்யும் செக்ஸ் ஸ்பிரே என்று ஒன்றுமே இல்லை என்றும், செக்ஸ் படங்கள் ஒட்டி செக்ஸ் ஸ்பிரே என்று சுற்றுலா பயணிகளை ஏமாற்றி விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.பல்வேறு புகழுடன் விளங்கும் கன்னியாகுமரிக்கு இந்த போலி செக்ஸ் ஸ்பிரே களங்கம் விளைவிப்பதாகவும், எனவே இதன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக