செவ்வாய், 7 அக்டோபர், 2014

சுதாகரன் திருமணத்துக்கு சிவாஜியின் மகன் மருமகன் கணக்கிற்கு ஜெயலலிதாவின் பணம் வந்துள்ளது நிருபணம் !

பெங்களூர்: வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவு முழுவதையும் செய்தது ஜெயலலிதாதான் என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பில் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக் கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ100 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதேபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் சுதாகரன் திருமணச் செலவு தொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கூறியிருப் பதாவது: சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் நடந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்தான் செய்தார் என்று ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
அதேபோல், அந்த திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் மணமகளின் வீட்டார்தான் செய்தனர் என்று ஜெயலலிதா தரப்பில் செலவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

மேலும், திருமண மண்டபத்துக்கான பந்தல், திருமண வரவேற்பு பத்திரிகை, ஜவுளிகள் மற்றும் திருமணத்துக்கு வருபவர்கள் தங்க ஏற்பாடு ஆகியவை தொடர்பான அனைத்து ஒரிஜினல் ரசீதுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஆடிட்டர் ராஜேசேகர் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் கட்சி அபிமானிகள், எம்எல்ஏக்கள்தான் சுதாகரன் திருமணச் செலவை செய்தனர். பந்தல், அலங்கார வளைவுகள், சமையல்காரர்கள் ஏற்பாடு மற்றும் 30 ஆயிரம் பேருக்கு சாப்பாடு ஆகியவற்றை கட்சிக்காரர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பெரிய கதையை ஜெயலலிதா கூறியுள்ளார்.  அதே நேரத்தில் 1996-1997ம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் சுதாகரன் திருமணச் செலவுக்காக ஸீ29.92 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அரசுத் தரப்பு தெளிவாக நிரூபித்துள்ளது.

திருமணத்துக்காக ஒரு தனி வங்கிக் கணக்கை ராம்குமார் தொடங்கியது ஆச்சரியப்படவைக்கிறது. பொதுவாக தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்காக பெற்றோர்கள் சேமிப்பு அல்லது கடன் பெறுவதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்குவார்கள். ஆனால் இந்த வழக்கில், திருமணத்துக்காக ஒரு தனி கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கிற்கு ஜெயலலிதா தரப்பிலிருந்தும் அவரது கம்பெனிகளின் தரப்பிலிருந்தும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் தந்தையான நாராயணசாமி அப்போதிருந்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு திருமணச் செலவுக்காக ஸீ4 லட்சம் கொடுத்துள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ராம்குமாருக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கமோ ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த வங்கிக் கணக்கு நகல்களில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதன் உண்மைத் தன்மையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ராம்குமார் அளித்த ஒட்டுமொத்த சாட்சியத்திலும் பணம் எந்த கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சுதாகரனின் திருமணச் செலவுக்கான பணம் அனைத்தும் ஜெயலலிதாவிடமிருந்துதான் பெறப்பட்டுள்ளது. மணமகளின் குடும்பத்திலிருந்து திருமணச் செலவு செய்யப்படவில்லை. மொத்த செலவுகள் ஸீ3 கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சுதாகரன் திருமண செலவுகளை பெண்ணின் வீட்டார்தான் செய்தனர் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால்,  பின்னர் செலவுகளை கட்சிக்காரர்கள் செய்தார்கள் என்றும் கூறினார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாறி, மாறி கூறி தவறுகளை மறைக்க முயன்றதை நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருமணசெலவு விவரம்
திருமணப் பந்தல் செலவு ஸீ5.21 கோடி, உணவு, மினரல் வாட்டர் மற்றும் தாம்பூலம் ஆகியவற்றுக்கான செலவு ஸீ1.14 கோடி, 34 டைட்டன் வாட்ச் ஸீ1.34 லட்சம், 100 வெள்ளி தட்டுகள் ஸீ4 லட்சம், திருமண உடைகளுக்கான தையல் கூலி ஸீ1.26 லட்சம், 56 ஆயிரம் திருமண பத்திரிகைகளை அனுப்புவதற்கான தபால் கட்டணம் ஸீ2.24 லட்சம் ஆகியவை செலவிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் சாதாரண கணக்கீடுதான் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக