ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தண்ணீர் காட்டிலே தமிழ்நாடு ! நீலி கண்ணீர் நாடகத்தில் பன்னீர்செல்வமும் பரிவாரங்களும் !


தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இன்றுடன், ஏழு நாள்கள் ஆகிறது. இம்முறை தமி ழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.   தொடர்மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. வடகிழக்குப் பருவமழை சேத விபரம் மாவட்ட வாரியாக....
நெல்லை-: சுமார் 1200 ஏக்கர் நெற்பயிர் மற்றும் வாழை மற்றும் தோட்டப் பயிர்கள் நாசம், ஆலங் குளம் அருகே உள்ள ஊத்துமலை கிராமத்தில் ஏரிக் கரை உடைந்து ஊத்துமலை மற்றும் அதனருகில் உள்ள கிராமங்கள் மூழ்கின. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெயது வருவதால் நெல்லை மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு பாபநாசம் போன்ற ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழனி_ திண்டுக்கல்: இரண்டு பாலங்கள் சேதம், 6 கிராமங்கள் துண்டிப்பு, சாலைகளை வெள்ளநீர் அடித்துச்சென்றது.
சேலம்: அய்ந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விளை விக்கப்பட்டிருந்த மக்காச் சோளப்பயிர்கள் நாசம்.நீலிக்கண்ணீர் கோஷ்டிக்கு இப்ப சுக்கிர திசை ?
காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை: தொடர்ந்து 5 நாள்களாக பெயது வரும் மழையால் இம்மாவட் டங்களில் பெருவாரியான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு வந்துவிட்டன. மழை காரண மாக கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்படுவதால் கடந்த 4 நாள்களாக நாகை வேதாரண்யம், சீர்காழி போன்ற பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
சுண்டபாளையத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட வீடுகள்
இராமநாதபுரம்: பெரும்பாலான உப்பளங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக திருப்புல்லாணி, வாலிநோக்கம், கோப்பெரிமடம், உப்பூர் போன்ற பகுதிகளில் கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு மழையால் பாதிப் படைந்துவிட்டது. இதனால் சுமார் 60 ஆயிரம் டன் உப்பு வியாபாரம் தேக்கமடைந்துள்ளது.

கடலூர்: தொடர்மழையின் காரணமாக மாவட் டத்திலுள்ள பல்வேறு ஏரிகள் நிறைந்து தண்ணீர் கரை கடந்து ஓடுகிறது.
இதன் காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு வாழும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். நெய்வேலி. நிலக்கரிச் சுரங்கங்கள் பெரு மளவில் பாதிப்பிற்குள்ளாகின. கடந்த 10 நாள்களாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளதால் மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி இன்றி எரிஎண்ணெய்மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு: மாவட்டத் தில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பிவிட்டன. இம்மாவட்டத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதை அடுத்து அதன் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கொங் கார்பாளையம் கோட்டத் திற்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெ ருக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை:- கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ள தால் உபரி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வெள்ள எச்ச ரிக்கை ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சேதமான பயிர் விவரம் ஏக்கர்
சேலம்: 8000 ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப் பட்ட பல்வேறு பயிர்கள் நாசம் (மக்காச் சோளம், சூரியகாந்தி, பருத்தி)
வேதாரண்யத்தில் உப்பு தயாரிப்பு பாதிப்பு
நெல்லை: 1200 ஏக்கர் நெற்பயிர் நாசம்
ஈரோடு: 7000 ஏக்கர் பல்வேறு பயிர்கள் நாசம்
கோவை: 5000 ஏக்கர் பயிர்கள் நாசம்
காவிரி டெல்டா மாவட்டம்: 15,000 ஏக்க ரில் பயிரிடப்பட்ட நெற்பயிர் கள் நீரில் மூழ்கியுள்ளது.
மதுரை: பெருவாரி யான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது.
இராமநாதபுரம்: 60,000 டன் உப்பு பாதிப்பு, நாகை, வேதாரண்யம், சீர்காழி மற்றும், புதுக் கோட்டை கடற்கரை மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர் மழைக் காரணமாக மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் நாள் ஒன்றுக்கு அய்ம்பது லட்சம்வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுது ஓடுகிறது. கோவை நகரில் மழையின் காரணமாக பொதுமக் களின் அன்றாட வாழ்க் கையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பா லான சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.  மழைகாரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் முதி யவர் ஒருவர் பலியானார்   நீலகிரிமாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெயது வரும் மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள் ளது. மேலும் மலை ரயில் இரண்டாவது வாரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நீலமலையின் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப் பட்ட பில்லூர் அணை நிறம்பி வழிகிறது. பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை டெல்டா மாவட் டங்களில் ஏற்பட்ட கடு மையான மழைகாரண மாக இதுவரை 40,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந் துள்ளன.
திருச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழைக்கார ணமாக அனைத்து வாய்க் கால்களில் வெள்ளம் பொருக்கெடுத்து ஓடுகி றது, வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், கரை கள் சரியாக பராமரிக்கப் படாதாலும் நீர் ஊருக் குள் பாய்ந்து செல்கிறது. திருச்சி கரூர் நெடுஞ்சாலை யில் உள்ள வாய்க்கால்கள் நீரம்பியதால் சாலை எங் கும் வெள்ளநீர் ஓடுகிறது, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரண மாக இதுவரை 3 பேர் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்துள்ளனர். மேலும் வெள்ள நீர் காரணமாக மாவட்டத் தில் தொற்றுநொய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்த மழையால் இதுவரை 2 லட் சம் ஏக்கர் விவசாயப்பயிர் கள் சேதமடைந்துள்ள தாக விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.
நாகையில் மூழ்கிய நெற் பயிர்கள்
மழை நீடிக்கும்
வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்தியில்  தமிழகம், புதுச்சேரியில்  வருகிற 27ஆம் தேதி வரை மழைக் கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இலங்கை அருகே மன் னார் வளைகுடா பகுதி யில் வெளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரண மாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்யும். ஒரு சில இடங் களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வளவு நடந்திருந்த தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளோ மிகவும் மெத்தனமாகவே இருப்பதாக பொதுமக்கள் கண்ணீர் கம்பலையுமாகப் பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்

Read more: http://www.viduthalai.in/headline/89961-2014-10-25-09-59-17.html#ixzz3HDQuDRuw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக