சனி, 25 அக்டோபர், 2014

மகளை அடித்த தந்தைக்கு 6,500 ரூ,அபராதம் மீறினால் ஆறு மாதம் சிறை! Bravo Kerala !

திருவனந்தபுரம் : மலப்புரம் அருகே முதல் மனைவியின் 11 வயது மகளை அடித்த தந்தைக்கு மஞ்சேரி நீதிமன்றம் ரூ.6,500 அபராதம் விதித்து உத்தரவிட்டது.மலப்புரம் அருகே உள்ள மஞ்சேரியைச் சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப் (38). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான சஜினா என்பவர் மூலம் இவருக்கு 11 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் அஷ்ரப் தனது மகளை 2வது மனைவியின் வீட்டுக்கு வருமாறு அழைத்துள் ளார். ஆனால் அந்த சிறுமி அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திர மடைந்த அவர் தனது மகளை கைகளால் அடித் தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இது தொடர்பாக சஜினா மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அஷ்ரப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மஞ்சேரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி ஜோஸ் மகளை அடித்த அஷ்ரப்புக்கு ரூ.6500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டாவிட்டால் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத் தொகையை சிறுமியிடம் வழங்கவும் நீதிபதி ஜோஸ் உத்தரவிட்டார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக