சனி, 4 அக்டோபர், 2014

பாலியல் வன்கொடுமை 3 வயது சிறுமி பலி:17 வயது மாணவன் கைது~! திருப்பூரில் வெளிமாநில குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை !

 திருப்பூர் வாசுகி நகரில் உள்ள வளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 12-ஆம் வகுப்பு மாணவன் விக்ரம் (வயது-17), இவரது வீட்டிற்கு அருகில் பிகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்துவரும் அவர்களின் 3-வயது பெண்குழந்தை கடந்த 18-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, தனியே அழைத்துச்சென்ற விக்ரம் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் இருந்தது.பாலியல் வண்கொடுமைக்கு உள்ளன அந்தச் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், பெற்றோர்கள்  குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிரு ப்பதாகத் தெரிவித்தனர். அப்போதுதான் தங்கள் குழந்தைக்கு நடந்த கொடூரம் அந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த பெற்றோருக்குத் தெரிய வந்தது.

சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் அந்த குழந்தையை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், குழந்தையின் பெற்றோர்களை காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத் தினர்.

கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பெண்குழந்தை நேற்று(வெள்ளிக்கிழமை)  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாணவன் விக்ரமை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், மாணவன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அம்மாணவன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுnakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக