வியாழன், 11 செப்டம்பர், 2014

Traffc ராமசாமி வழக்கில் வெற்றி ! சகாயம் ஐ ஏ எஸ் தலைமையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு ! உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை: சட்டவிரோதமாக இயங்கும் மணல் மற்றும் கிரானைட் குவாரி குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பலகோடிக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்ததை மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரி, மணல் குவாரி இயங்கிவருவதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். எனவே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமயிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமாக இயங்கும் மணல் மற்றும் கிரானைட் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டனர். இந்த ஆய்வு குறித்து அகோடோபர் 28-ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக