திங்கள், 29 செப்டம்பர், 2014

New york மோடியின் கூட்டத்தில் CNN. IBN பத்திரிக்கையாளர் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் !

நியூயார்க்: நியூயார்க்
மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட் செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகையாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென தாக்கப்பட்டார். அவரை கேலி செய்த மோடி ஆதரவாளர்கள் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளனர் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்தீப் விடுத்துள்ள டிவிட் செய்தியில், நல்லவேளை என்னைத் தாக்கியவர்களை நாங்கள் கேமராவில் படம் பிடிக்க முடிந்தது. இப்படிப்பட்டவர்களை வெட்கப்பட வைக்க அவர்களது முகத்தை அம்பலப்படுத்துவதுதான் என்று கூறியுள்ளார். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக