திங்கள், 8 செப்டம்பர், 2014

தலித்துக்களை இஸ்லாமியர்களோடு மோதவிடுவதற்கு இந்து முன்னணி முயற்சி ?

ganesha_gamesகிராமங்களில் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தோடு தலித் மக்கள் குடியிருக்கும் ‘சேரி’க்குள்ளும் வரச் சொன்னால், தனக்கு தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்து கடவுள்கள்…
நகரங்களில் தலித் இளைஞர்களுக்கு ‘இந்துக்கள்’ என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதின் மர்மம் என்ன? சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;
திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும்,
மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,
மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதின் மர்மம் என்ன?  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக