செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தயாநிதி அழகிரி அதிரடி : திரையுலகினருக்கு அண்டா அண்டாவா பயம் மட்டும்தான் இருக்கு ! சுயமரியாதை இல்லை !

தமிழ் திரையுலகினருக்கு பயம் மட்டும்தான் அண்டா அண்டாவாக இருக்கிறது: தயாநிதி அழகிரி வாரணம் ஆயிரம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.  இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.அவர்,  ‘’இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா?வரி விதிப்பு மற்றும் 'தலைவா', 'விஸ்வரூபம்' போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் தான் அண்டா அண்டாவாக இருக்கிறது. ஹா ஹா ஹா’’என்று தயாநிதி  தெரிவித்துள்ளார். nakkheeran.in  அப்படி போடு கண்ணா போடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக