வியாழன், 4 செப்டம்பர், 2014

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு: ஞானதேசிகன் பேட்டி ! அப்ப பிரவீனு ?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,இடைத்தேர்தல் என்பது எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இடைத்தேர்தல் எதிர்க்கட்சிகள் சந்திக்கும் விளைவுகளும் எல்லோருக்கும் தெரியும். தேர்தலை எதிர்கொள்வது ஜனநாயக கடமை என்றாலும், தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசத்தை அளிக்காததாலும், தற்போதை சூழ்நிலை காரணமாகவும் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் தயாராக இருந்தார்கள். சில இடங்களில் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களிடத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட கூறியிருக்கிறோம்.
இந்த இடைத்தேர்தலை நடத்தும் முன்பு அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி மாநில தேர்தல் ஆணையம் கருத்தை கேட்டு இருக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் தமிழக பாரதீய ஜனதா போட்டியிடுகிறதே? என்று கேட்கிறீர்கள். அவர்கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள். மத்திய அரசின் 100 நாள் ஆட்சியை பார்க்கும்போது, உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகரித்து இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று மோடி அறிவித்து இருப்பது மோசமான அணுகுமுறை என்று கூறினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக