வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தினமும் 92 பெண்கள் பலாத்காரம் செய்யபடுகிறார்கள் ! டெல்லியில் தான் அதிகமாக 1, 636 பலாத்கார வழக்குகள்

இந்தியாவில் தினமும் 92 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் தினமும் 92 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் நகரங்களில் டெல்லியில் தான் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 1, 636 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பலாத்கார வழக்குகள் பதிவாகின். ஆனால் இந்த எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 33 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 556 பேர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
2012ம் ஆண்டில் டெல்லியில் 706 பலாத்கார வழக்குகள் பதிவாகின. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து 1, 636 ஆக உள்ளது. கடந்த ஆண்டில் டெல்லியில் தினமும் குறைந்தது 4 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் டெல்லியை அடுத்து மும்பையில் 391 பலாத்கார வழக்குகளும், ஜெய்பூரில் 192ம், பூனேவில் 171 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இருப்பதிலேயே மத்திய பிரதேச மாநிலத்தில் தான் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 4 ஆயிரத்து 335 பலாத்கார வழக்குகள் பதிவாகின. அம்மாநிலத்தில் தினமும் 11 பலாத்கார வழக்குகள் பதிவாகின.
ராஜஸ்தான் கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 285 பலாத்கார வழக்குகளும், மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 63ம், உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 50 வழக்குகளும் பதிவாகின.
கடந்த ஆண்டு பதிவான பலாத்கார வழக்குகளில் 13 ஆயிரத்து 304 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள். இந்த எண்ணிக்கை கடந்த 2012ம் ஆண்டில் 9 ஆயிரத்து 82 ஆக இருந்தது
பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் தங்களுக்கு தெரிந்தவர்களால் தான் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரால் 539 பேரும், அக்கம்பக்கதினரால் 10 ஆயிரத்து 782 பேரும், உறவினர்களால் 2 ஆயிரத்து 315 பேரும், தெரிந்தவர்களால் 18 ஆயரித்து 171 பேரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
  tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக