செவ்வாய், 30 செப்டம்பர், 2014

அபராத தொகைக்காக ஜெயாவின் கொடைநாடு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதலாக வாய்ப்பு !

பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைக்காக அவரது பெயரிலான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகைக்காக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் என 211 சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.  1988-ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (டி) ஆகிய பிரிவுகளில் 7 வருடம் சிறை மற்றும் சேர்க்கப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்களும் 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அன்றைய மதிப்பு ரூ. 7.5 கோடி. இவற்றின் இன்றைய விலை நிலவரம் பல மடங்கு அதிகமாகி உள்ளது. ரூ. 100 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதால் இவை அனைத்தும் பறிமுதலாகக் கூடும் எனக் கூறப்படுகிறது சாராய உடையாரை விட்டு வெள்ளைக்காரனை மிரட்டி அடிமாட்டு விலைக்கு பறித்த கொடைநாடு எஸ்டேட் மீண்டும் அந்த பிரிடிஷ் காரனிடமே கொடுக்க வேண்டும் அதுதான் தர்மம் ! அவனின் சாபம்தான் களிதின்ன வைத்தது

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக