ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

Kingfisher 900 கோடி கடன் ; சி.பி.ஐ., விசாரணை ஆரம்பம் ! மல்லையாவுக்கு நீதித்துறையும் பொதுத்துறை வங்கிகளும் சேவகம் செய்யுமா ?

புதுடில்லி: ஏற்கனவே பல்வேறு நஷ்டத்தில் இயங்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.900 கோடி கடன் கொடுத்தது எப்படி ? இதற்கான காரணம் என்ன ? யார் பொறுப்பு என்பது குறித்து சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். உலகில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் ஏராளமான கடன் சுமை தாங்க முடியாமல் தவித்தது. இதனால் கடந்த 2012 அக்டோபர் மாதம் தனது விமான சேவையை நிறுத்தியது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே பல வங்கிகள் கடன் கொடுத்திருந்த நிலையில் அபாய கட்டத்தில் இருந்த போது, கடந்த 2009ல் ஐ,டி.பி.ஐ வங்கி ரூ.900 கோடி கடனை வழங்கியிருக்கியது. என்னிடம் விசாரணையை கொடுத்தால் ஒரே நாளில் தியாகி ( தாதா) மாமா மல்லையாவையும் , IDBI பேங்க் செர்மான்னையும் தூக்கு கயிற்றிற்கு அனுப்பியிருப்பேன் . சிபிஐ எல்லாம் சுத்த வேஸ்ட்டு .மாமா மல்லையா மறுபடியும் அழகான பாலிவூட் நடிகையை சிபிஐ ஆட்களுக்கு கொடுத்து கேசை ஜெயித்து விடுவார் . நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்   இந்த  பார்பன விமான .பிளஸ்  சாராய  முதலாளி மீண்டும் மீண்டும் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்பார் எந்த சட்டமும் ஒன்னும் செய்யாது ?
இது தொடர்பாக வங்கி பெரும் நஷ்டத்தில் இருப்பதாக ஒரு விவர அறிக்கை வெளியானது. இதனையடுத்து விசாரிக்க சி.பி.ஐ., விசாரிக்க களம் இறங்கியது. இன்று முதல் அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். யுனைட்டடு பிரேவரிஸ் குரூப் சேர்மன் விஜயமல்லையாவிடமும் சி.பி.ஐ., விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று பொதுத்துறை வங்கிகள் பல நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 27 முதற்கட்ட ரிப்போர்ட்டை சி.பி.ஐ., பதிவு செய்து விசாரித்து வருவதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக