ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேலி ராணுவம்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் 11 வயது சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்தச் சிறுவனின் உறவினர்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.; கலீல் மொகமது அல்-அனாதி என்ற பெயரையுடைய அந்தச் சிறுவன் வெஸ்ட் பேங்க்கில் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஹீப்ரான் நகரில் அல்-ஃபவார் அகதிகள் முகாம் அருகே, தனது வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
”கலீல் வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டது. வந்து பார்த்தால் கலீல் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். பின்பக்கமாக சுட்டிருக்கிறார்கள்” என்று கலீல் உறவினர் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து சிறுவனின் வீட்டினருகில் உறவினர்களும் மற்றவர்களும் குவிந்துள்ளனர்.

இன்று சிறுவனின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக