வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாவிடில் பதவி விலகுங்கள் ! அருன்ஜெட்லிக்கு (Delhi gang rape victim) ஜோதிசிங்கின் பெற்றோர் கடும் கண்டனம் !

அருண் ஜெட்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறிய சம்பவம் உலகளவில் பிரபலப்படுத்தப்பட்டது. அதனால், இந்தியா சுற்றுலாத்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது
ஒரு பலாத்கார சம்பவத்தால் இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு பல கோடி இழப்பு என்று அருண் ஜேட்லி பேசியிருப்பதற்கு, எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என்று நிர்பயாவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். தில்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து வீசப்பட்ட பெண்ணின் பெற்றோர் இது குறித்து கூறுகையில், ஜேட்லி கூறியுள்ளதை அறிந்து மிகவும் மனம் வருந்தினோம். இந்த அரசியல்வாதி எந்த அடிப்படையும் இல்லாமல் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார், ஏன் என்றால் என்ன நடந்தது என்பதே அவருக்குத் தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்ற உறுதி மொழியோடு தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள் என்று கூறினார்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக