வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பிரியாமணி ரக்ஷிதா ராமுடன் தகராறு ! கன்னட படபிடிப்பில் ....

சென்னை: ஷூட்டிங்கில் மற்றொரு ஹீரோயினுடன் மோதலில் ஈடுபட்டார் பிரியாமணி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.‘பருத்
திவீரன் பிரியாமணி தற்போது கன்னடத்தில் ‘அம்பரீஷா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இது 2 ஹீரோயின்கள் கதை. மற்றொரு ஹீரோயினாக ரட்சிதா ராம் நடிக்கிறார். இரு ஹீரோயின்களுக்கும் ஷூட்டிங்கின்போது மோதல் ஏற்பட்டது. இதில் அப்செட் ஆன பிரியாமணி கோபம் அடைந்தார். இதனால் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது படப்பிடிப்பு தளத்துக்கு வராமல் இழுத்தடித்தார்.இதையடுத்து பட குழு சார்பில் பிலிம்சேம்பரில் புகார் தரப்பட்டது.


சேம்பர் நிர்வாகிகள் பிரியாமணியிடம் பேசி உடனடியாக ஷூட்டிங்கில் கலந்துகொள்ளுமாறு கூறினார்கள். இதை தட்டிகழிக்க முடியாமல் ஷூட்டிங்கில் பங்கேற்று முடித்துக்கொடுத்தார் பிரியாமணி. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்த பிரியாமணி ஆடியோ விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இது இயக்குனர், தயாரிப்பாளர், பட ஹீரோ தர்ஷன் ஆகியோரை அப்செட்டில் ஆழ்த்தியது. - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக