செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

மேனகா காந்தி : வருண் காந்தி உபியின் நல்ல முதலமைச்சராக இருப்பார் !


வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது: மேனகா காந்தி<;வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இது குறி்த்து லக்னோவில் அவர் கூறியதாவது: தற்போது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், மத்தியில் பா.ஜ.கவும் ஆட்சியில் உள்ளன. மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி அரசு வளர்ச்சிப் பணிகளை நிறுத்தி விட்டது. பா.ஜ.க வளர்ச்சிப் பணிகளை செய்ய விரும்புகிறது.உத்தரப் பிரதேசத்தில் சாலை, மின்சாரம், பள்ளி, போன்றவற்றின் வளர்ச்சிப் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை காண நீங்கள் ஒரு வருடம் காத்திருங்கள். 2017ம் ஆண்டு தேர்தலில் வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு அமைந்து வருண் முதல்வராகப் பதவியேற்றால் அவர் சிறந்த முதல்வராக இருப்பார் என தெரிவித்தார் nakkheeran in , இவரு அப்பன் சஞ்சே காந்தியின் அடாவடி அலங்கோலம் எல்லாம் பலருக்கும் மறந்திருக்கும் பழைய Flashback ஐ மாத்திரம் அல்லாமல் இந்த வருண் மட்டும் என்னவாம் ?ஒரு பேட்டை ரவுடிக்குரிய சகல தகுதியும் உள்ளவர்தான் . கொஞ்சம் பேச்சை கேட்டு பாருங்க ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக