செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

பிரியங்கா காந்தி உத்தர பிரதேஷ் காங்கிரஸ் தலைவராக ! பராக் !

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக, பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்கிறார். அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆளுங்கட்சியாக இருந்த அக்கட்சி, வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கட்சியின் படுதோல்விக்கு துணைத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலர் முணுமுணுத்து வருகிறார்கள்.
மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றும் பணியும் நடந்து வருகிறது.
பிரியங்கா இருப்பினும், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள்.  வாழ்த்துக்கள் ஆனால் ஒரேஒரு  ஆலோசனை  அம்மணீ உங்க  கணவன்  பக்கா  பிராடாக இருக்கிறார் ! அவரை எங்க தேடி பிடிச்சீங்களோ  பெனாசிருக்கு  வாய்ச்ச  சர்தாரி  மாதிரி தெரியராருங்கோ ! ஜாக்கிரதையா இருங்கோ  ! உங்க  பெயரையும் கெடுத்து  ஊரை அடிச்சு  உலைல   போட்ட ஆசாமி !
பிரியங்காவை இந்திரா காந்தியின் மறுவடிவமாக மக்கள் பார்ப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
எனவே, கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சுவதற்காக, பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்க உள்ளார். இந்த ஆண்டு இறுதியில், சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அது முடிவடைந்தவுடன், அவர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைகிறார்.
பதவி பிரியங்கா, காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இதுவரை இணையாவிட்டாலும், தன்னுடைய தாய் மற்றும் சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதிகளான ரேபரேலி, அமேதி ஆகியவற்றில் தேர்தலின்போது, தீவிர பிரசாரம் செய்வது வழக்கம். அங்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
தற்போது, முறைப்படி கட்சியில் இணையும் பிரியங்காவுக்கு தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) என்ற பதவி அளிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த பதவியை தற்போது சோனியா குடும்ப விசுவாசியான ஜனார்த்தன் திவிவேதி வகித்து வருகிறார்.
உத்தரபிரதேசம் அதே சமயத்தில், கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் பணியை உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று கட்சியில் ஒரு சாரார் கருதுகிறார்கள். எனவே, பிரியங்கா, உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் கட்சி வலுவடைந்தால், இதர பகுதிகளிலும் வலுவடையும் என்ற எண்ணம், கட்சியில் நிலவுகிறது.
பிரியங்கா, உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகத்தை கவனிப்பதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், பிரியங்கா தீவிர அரசியலில் குதித்த பிறகும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள கூறுகின்றன. ராகுல் காந்தி தலைமை மீது அதிருப்தி இருந்த போதிலும், அவரே கட்சியை தொடர்ந்து வழி நடத்துவார் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
அமித் ஷாவை முந்துவாரா? பிரியங்காவின் வருகையால், காங்கிரசுக்கு புத்துயிர் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அம்மாநில பா.ஜனதா பொறுப்பாளராக பணியாற்றிய அமித் ஷா, அங்கு 71 தொகுதிகளில் அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
பா.ஜனதா தேசிய தலைவராக ஆனபோதிலும், அவர் உத்தரபிரதேச கட்சி நிர்வாகத்தை நேரடியாக கவனித்து வருகிறார். எனவே, அவரது ஆதிக்கத்தை மீறி, உத்தரபிரதேசத்தில் பிரியங்காவால் காங்கிரசை வலுப்படுத்த முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக