புதன், 20 ஆகஸ்ட், 2014

தெலங்கான பிரஜைகள் கணக்கெடுப்பினால் ஆந்திர மக்கள் பீதி ! கலவரம் வெடிக்க கூடும் ?

 சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, இந்த கணக்கெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.  நான் ஹிட்லரை விட மோசமானவன்னு சொல்லிக்கிட்டு அலையுறான். அப்புறம், ஆந்திர மக்களை பட்டிக்குள் போட்டு கொல்லச் செய்தாலும் செய்வான்.
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், ஒரே நாளில் வீடு வீடாக நடத்தப்பட்ட, 'குடியுரிமை சர்வே'யால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்வே காரணமாக, தெலுங்கானாவில் வசிக்கும் ஆந்திர மக்களிடையே, பீதி ஏற்பட்டது.ஆந்திரா மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி உள்ளது. இதன் முதல்வராக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த சந்திரசேகர ராவ் பதவி வகிக்கிறார்.தெலுங்கானாவில், அரசின் நலத் திட்டங்கள், மக்களுக்கு முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், 'குடியுரிமை சர்வே' என்ற பெயரில், மெகா சர்வே நடத்த, சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.இதற்கு, காங்., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'தெலுங்கானாவில் வசிக்கும் ஆந்திர மக்களை அடையாளம் கண்டு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் தான், இந்த சர்வே நடத்தப்படுகிறது' என, அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமான ஐதராபாத்தில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக சொத்து உள்ளது. இதை பறிமுதல் செய்வதற்காக, தெலுங்கானா மாநில அரசு, இந்த சர்வேயை நடத்துவதாக, அவர்கள் குற்றம் சாட்டினர். ஒரு வகுப்பு கலவரம் நடக்க கூடிய சகல சகுனங்களும் தெரிகிறது, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது, குழம்பின குட்டையில் மீன் பிடிக்க பாஜக ஆவல் ?


இது தொடர்பாக, ஆந்திர ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், சில நிபந்தனைகளின் அடிப்படையில், சர்வே நடத்த உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, மெகா சர்வே, ஒரே நாளில், தெலுங்கானாவில் உள்ள, 10 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. சர்வே நடத்துவதற்கு வசதியாக, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்களும் மிக குறைவாகவே காணப்பட்டன. ஆம்புலன்ஸ், மருத்துவமனை, மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கின.சர்வேயில் தங்கள் பெயர் விடுபட்டால், அரசின் நலத் திட்டங்கள் கிடைக்காமல் போய் விடும் எனக் கருதி, பணி நிமித்தமாக வெளியூர்களில் வசித்தவர்கள், ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருந்தனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு, துவங்கிய சர்வே, இரவு 8:00 மணி வரை நடந்தது. அரசு ஊழியர்கள், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

குடியிருப்போரின் பெயர், விவரம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை, 'டிவி,' பிரிஜ் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன. பெரும்பாலான மக்கள், ஆர்வத்துடன், தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்தனர்.ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்த சர்வே காரணமாக, ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலத்திலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது. ஆனாலும், தெலுங்கானாவில் வசிக்கும் ஆந்திர மாநில மக்கள் மத்தியில், நேற்று பெரும் பீதி நிலவியது.

தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், ஹரீஷ் ராவ் கூறியதாவது:ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதால், அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், பெரும் குளறுபடி நிலவுகிறது. உண்மையான பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே, இந்த சர்வே நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில், தேவையில்லாமல் வதந்தி பரப்பி விடப்பட்டு விட்டது. ஆனால், அந்த வதந்தியை நம்பாமல், சர்வே நடத்துவதற்கு, மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். சர்வே, வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ. 20 கோடி செலவு: *தெலுங்கானாவில் உள்ள, 10 மாவட்டங்களிலும், இந்த மெகா சர்வே, ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
*10 மாவட்டங்களிலும் உள்ள, 84 லட்சம் குடும்பத்தினரிடம், விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
*இந்த சர்வேக்காக, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
*ஒரு ஊழியருக்கு, 25 குடும்பங்கள் என்ற அடிப்படையில், சர்வே நடத்தப்பட்டது.
*ஐதராபாத்தில் மட்டும், 20 லட்சம் குடும்பத்தினரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
*இந்த சர்வேக்காக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, இரண்டு கோடி ரூபாய் என்ற வகையில், 10 மாவட்டங்களுக்கும், 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
*கடந்த, 1956க்கு முன், தெலுங்கானாவை
பூர்வீகமாக கொண்டவர்கள் யார், அவர்களின் வாரிசுகள் யார் என்பதை அடையாளம் காண்பது தான், இந்த சர்வேயின் முக்கியமான நோக்கம்.
*சர்வே குறித்த முடிவு வெளியான பின், ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களில், பதற்றமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக