புதன், 20 ஆகஸ்ட், 2014

கலைஞர் நேரடி கண்காணிப்பு ! அறிவாலய பணியாளர்களுக்கு திடீர் உத்தரவு !

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க முட்டுக்கட்டையாக இருப்பது, மாவட்டம் தோறும் நடத்தப்படும் நேர்காணலில் ராஜ்யசபா எம்.பி, கனிமொழிக்கு எதிராக கட்சியினரை கொம்பு சீவி விடுவது, மூத்தவர்களை புறக்கணிப்பது போன்ற விஷயங்களில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மீது, கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.இதனால், கட்சி பணிகள் தொடர்பாக, அனைத்து விவரங்களும், தன் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு, கருணாநிதி திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.  திமுக ஸ்டாலினின் விளையாட்டு பொம்மையாகியது போதும்ட்சி நலனுக்காக ஜெயாவும் ஜானகியும் ஒன்று சேர்ந்து கட்சியை பலப்படுத்தி விட்டனர் அன்று. ஆனால் இங்கே நடப்பது சொத்து பிரச்சனை, விட்டுக் கொடுக்கும் எண்ணமே இவர்களுக்கு வராது, அப்படி வந்தாலும் பின்னால் இருக்கும் இவர்களின் குடும்பம் விட்டு வைக்காது/
தன் பொறுப்பில்:

வயது மூப்பு காரணமாக, தீவிர அரசியலில் ஈடுபடாமல், கருணா நிதி, ஓய்வு எடுக்க வேண்டும் என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதற்கு இசைவது போல, கருணாநிதியும், கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை, தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்டாலின் விருப்பப்படி, அவரிடமே கொடுத்தார்.ஆனால், இரண்டு தேர்தல்களிலும் கட்சி படுதோல்வியை சந்தித்திருப்பதால், பழைய படியே மீண்டும் கட்சியின்நிர்வாகப் பொறுப்பை கருணாநிதி, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.இதனால், கட்சியிலிருந்து, ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் மட்டத் தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், கட்சியை சீரமைத்து, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, கருணாநிதி முடிவெடுத்து செயல்படுகிறார். அதனாலேயே, ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த, அமைப்பு செயலர் கல்யாண சுந்தரத்தை, கட்சியை விட்டு, தற்காலிகமாக நீக்கினார். அந்த இடத்தில் தன் ஆதரவாளர் ஆலந்தூர் பாரதியை நியமித்தார்.இதற்கிடையில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்து, கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும், கருணாநிதி வேகமாக இருக்கிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதோடு, மாவட்ட வாரியாக, நேர்காணல் நடத்தி, அழகிரியை கட்சியில் சேர்ப்பதற்கு எதிராகவும், கனிமொழிக்கு எதிராகவும் கட்சியினரை ஸ்டாலின் தூண்டி விடுவதாக நினைக்கும் கருணாநிதி, கட்சியில் அவரது ஆதிக்கத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.அதேபோல், மூத்த தலைவர்களை ஸ்டாலின் புறக்கணிப்பதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை.
கட்டுப்பாட்டுக்குள்:


இதையெல்லாம் சரிபடுத்துவதற்காக, கட்சியில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் கருணாநிதி, கட்சி தலைமை அலுவலகம் அறிவாலயத்துக்கு வரும் புகார்கள், தகவல்கள் அனைத்தையும் தினந்தோறும், தன் கவனத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டிருக்கிறார்.இதனால், கட்சியை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள், கருணாநிதி கொண்டு வந்து விட்டார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக