வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளார்கள் ! மற்றுமொரு உலக சாதனை ?

நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014 ஜூன் வரை மொத்தம் 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளன.அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன. இவற்றில் 45 சதவீத குழந்தைகள் மட்டுமே திரும்ப கிûPத்துள்ளன. மற்றவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. அண்டை நாடான  பாகிஸ்தானில் ஆண்டுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்றால் இதைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன.
தேசிய குற்ற ஆவண காப்பாக புள்ளிவிவரப்படி இந்தியாவில் எட்டு நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. காணாமல் போகும் குழந்தைகளில் 55 சதவீதம் பெண் குழந்தைகள். மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 50 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். இங்கு ஆண் குழந்தைகளை விட 10 ஆயிரம் பெண் குழந்தைகள் கூடுதலாக மாயமாகியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 15 ஆயிரம், ஆந்திராவில் 11 ஆயிரத்து 625, டெல்லியில் 10 ஆயிரத்து 581 பெண் குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக