தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு நெருக்கமாகச் செயல்பட்ட அமைப்பு செயலர்
பெ.கல்யாணசுந்தரம் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்,
அக்கட்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி 'கை' மீண்டும் ஓங்கியுள்ளது.
இனி, கட்சியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, கருணாநிதி, தனக்கு நெருக்கமாகச் செயல்படக் கூடிய ஆலந்துார் பாரதியை, அமைப்பு செயலர் பதவிக்கு நியமித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறிவாலயத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும், அமைப்பு செயலர் கல்யாணசுந்தரத்திற்கும் இடையே, கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அமைப்பு செயலர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, கல்யாணசுந்தரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞரே கொஞ்சம் உசாரா இருங்க. போகிற போக்கை பார்த்தால் உங்களுக்கு ஔரங்கசீப் பின் நிலைமை வந்து விடும் போல அறிகுறிகள் தெரிகிறது.
நேற்று முன்தினம், பெங்களூரிலிருந்து, ஸ்டாலின் சென்னைக்கு திரும்பியதும், கோபாலபுரம் வீட்டிற்கு சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது, தன் ஆதரவாளர் கல்யாண சுந்தரத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியதை, கருணாநிதி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதற்கிடையில், இந்த கடித நகல்களை கல்யாணசுந்தரம் ஊடகங்களுக்கு அனுப்பி விட, அதை வைத்து, அவர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்க, கருணாநிதி உத்தரவிட்டார். உடனே, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்தார், கட்சி பொதுச் செயலர் அன்பழகன்.
கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கை, கட்சி தொண்டர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.அறிவாலயத்தில், மேற்கொண்டும் அதிரடியாக பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும், கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க வேண்டும் எனவும், பெரும்பான்மையான கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக