வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அதிக வயாக்ரா சாப்பிட்டு உறவு கொள்கையில் இறந்த ஆந்திர வாலிபர்

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு மைனர் பெண்ணுடன் பாலியல் உறவு மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்தார். தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை செயல் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவர் திப்தூர் கே.ஆர்.விரிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் உடலில் எந்தவித காயமும் இன்றி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திப்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேத்தனின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சேத்தனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சேத்தனின் தோழியான 16 வயது மைனர் பெண்ணை கண்டறிந்து அவளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவள் போலீசாரிடம் கூறுகையில், “நானும் சேத்தனும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடவில் காதலாக மாறியது. அதானால் பலமுறை இருவரும் தனிமையில் சந்தித்து பாலியல் உறவு மேற்கொண்டு வந்தோம். சம்பவத்தன்று சேத்தன் நீண்ட நேரம் பாலியல் உறவு மேற்கொள்வதற்காக சில மாத்திரைகளை சாப்பிட்டார். அதன் பின்னர் உறவு மேற்கொண்டோம். அப்போது சேத்தன் திடீரென இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் செய்வதறியாது அங்கிருந்து சென்று விட்டேன்“ என்றார்.
இதற்கிடையே சேத்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ருத்ரமூர்த்தி கூறுகையில், “அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை உட்கொண்டதால் ரத்த நாளங்கள் விரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையில் உள்ள ரத்த நரம்புகளும் விரிவடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு சேத்தன் மரணம் அடைந்துள்ளார்“ என தெரிவித்தார்.
பாலியல் உறவு மேற்கொள்ளும்போது இளைஞர் இறந்த சம்பவம் திப்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக