வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அழகிரி மீண்டும் திமுகவில் இணையக்கூடாது என்று யாகம் வளர்க்கும் தம்பியும் அம்பிகளும் !

மதுரை:தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீண்டும் கட்சியில் இணைவதற்கான சூழ்நிலை ஏற்பட்டபோது, கருணாநிதிக்கு அவர் விதித்த 5 நிபந்தனைகளால் சமாதான படலம் திசை மாறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.( என்னே ஒரு அற்ப ஆசை அவாளுக்கு  ? இதற்காகவே சிலர் ஓவர்டைம்  வேலை பார்க்கின்றனர் சிலருக்கு சுயமரியாதை பிடிக்காது சிலருக்கு சுயநலம் சுயநலம் அம்புடுதே !)
மதுரையில் எழுந்த போஸ்டர் பிரச்னையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, சட்டசபை தேர்தலுக்குள் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர், கருணாநிதி -ஸ்டாலின்- அழகிரி தரப்பு என தொடர்ந்து முக்கோண சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளரான கல்யாணசுந்தரம், கட்சி அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்து கல்யாணசுந்தரத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் அழகிரி. இச்சம்பவத்திற்கு பின், மதுரையில் இருந்து சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள மகன் தயாநிதி வீட்டிற்கு தனது முகாமை அழகிரி மாற்றினார். அவரது வீட்டில் தான் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் 'பஞ்சாயத்து படலத்தை' தொடர்ந்து நடத்துகின்றனர்.

பேச்சுவார்த்தையில் வெளியான சில தகவல்கள் குறித்து அழகிரி ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:பத்து நாட்களுக்கும் மேல் அழகிரி சென்னையில் முகாமிட்டு, தி.மு.க., நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். அவரது மகன் வீட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் போது நடவடிக்கைக்கு உள்ளான கல்யாணசுந்தரத்தின் பேச்சு எழுந்தது. அப்போது, "தலைவரை பற்றி பேசுவதற்கு கல்யாணசுந்தரத்திற்கு என்ன அருகதை இருக்கு. கட்சியை வைத்து லாபமடைந்த அவர், தலைவருக்கே புத்திமதி சொல்லி விமர்சிக்கும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்டாரா. யார் கொடுத்த துணிச்சல்" என கொந்தளித்து விட்டார்.
அழகிரியின் கொந்தளிப்பு பேச்சு குறித்து கருணாநிதிக்கு தெரியபடுத்திய போது "வலைத்தளத்தில் என்னை சிலர் விமர்சித்து வரும்போதும், கட்சியால் பல கட்ட நடவடிக்கைக்கு ஆளாகி கஷ்டப்படுகிற போதும், என்னை விமர்சித்தவர் குறித்து கொந்தளித்து விட்டானே. அவன் தைரியம் எல்லோருக்கும் பிடிக்கும்," என நெகிழ்ந்து விட்டார். இதையடுத்து சமாதான படலம் பேசியவர்களிடம், "மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு கட்சியில் சேர சொல்லுங்க," எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.
சந்தோஷத்தில் அழகிரியை சந்தித்த அக்குழு, கருணாநிதியின் மகிழ்ச்சியை அவரிடம் தெரிவித்துள்ளனர். பின், நீண்ட தயக்கத்திற்கு அடுத்து மன்னிப்பு கடிதம் விஷயத்தையும் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, "மன்னிப்பு கடிதம் நான் கொடுக்க தயார்," என கூறிய அழகிரி, யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதன் விவரம்:1. நீக்கப்பட்ட எனது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.2. கலைக்கப்பட்ட மதுரை நகர் அமைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் இருந்தாலும் பரவாயில்லை.3. மீண்டும் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை வழங்க வேண்டும்.4. தென் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும்.5. கட்சியில் கனிமொழிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.
கருணாநிதியிடம் இந்த நிபந்தனையை தெரிவித்தவுடன், அங்கிருந்த பொதுச் செயலாளர் அன்பழகனை பார்த்த அவர், "கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டேனா, அழகிரி நீக்கப்பட்டாரா," என கேள்வி எழுப்பி, அந்த சமாதானப் படலத்தை கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கஉத்தரவிட்டுள்ளார்.
விரைவில் அழகிரி கட்சியில் சேர்ந்துவிட வாய்ப்புகள் கைகூடி வருகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக