வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

கேரளாவில் சுமார் 700 பார்கள் மூடப்பட்டது ! நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இனி BAR !

கேரளாவில், 700–க்கும் மேற்பட்ட மதுபான பார்களை மூட ஆளுங்கூட்டணி முடிவு செய்துள்ளது. ஞாயிறு தோறும் மதுவுக்கு விடுமுறை விடவும் திட்டமிடப்பட்டது.
மதுவிலக்கு கேரளாவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஏ.கே.அந்தோணி தலைமையிலான அரசு, சாராயக்கடைகளுக்கு தடை விதித்தது. அதையடுத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகள், அரசுக்கு சொந்தமான மாநில மதுபான கழகத்தின் சில்லறை கடைகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டது .
இந்நிலையில், உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, கேரளாவில், படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. சாதாரண மக்களுக்கு சகஜமாக மதுபானம் கிடைப்பதை குறைக்க உறுதி பூண்டுள்ளது. இதற்கு கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஆதரவு தெரிவித்தது.

மதுபான பார்கள் கேரளாவில், ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களில் இயங்கி வந்த 418 மதுபான பார்கள், உரிய வசதிகள் இன்றி செயல்பட்டதாக கூறி, அவற்றின் உரிமங்கள் புதுப்பித்து தரப்படவில்லை. அந்த பார்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மூடியே கிடக்கின்றன.
இந்நிலையில், முதல்–மந்திரி உம்மன் சாண்டி தலைமையில், ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஏற்கனவே மூடப்பட்டுள்ள 418 மதுபான பார்களுடன், மேலும் 312 பார்களையும் மூடுவது என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு, மாநில மந்திரிசபைக்கு முறைப்படி சிபாரிசு செய்யப்படும்.
நட்சத்திர ஓட்டல் இதுகுறித்து, கூட்டம் முடிவடைந்த பிறகு, முதல்–மந்திரி உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:–
ஏற்கனவே மூடப்பட்டுள்ள 418 பார்களும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. இதர 312 பார்கள், சட்ட ஆலோசனை பெற்று மூடப்படும். ஒருவேளை, அவற்றை உடனடியாக மூடுவதில் சட்ட சிக்கல்கள் இருந்தால், அடுத்த நிதி ஆண்டில் இருந்து அவை இயங்க அனுமதிக்கப்படாது.
இந்த முடிவின் மூலம், இனிமேல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபான பார்கள் இயங்கும்.
10 சதவீத கடைகள் மூடப்படும் சில்லறை மதுபான கடைகளைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் மூடப்படும். மாதத்தின் முதல் நாள், மதுவுக்கு விடுமுறை நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் மது விடுமுறை நாட்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 52 நாட்களுக்கு மேல், மது விடுமுறை நாட்களாக இருக்கும்.
மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாபெரும் பிரசாரம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநில மதுபான கழகத்தின் விற்பனை வருவாயில் ஒரு சதவீதம், பிரசார செலவுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக