ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சட்ட சபை தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது ! லோக்சபா தேர்தலில் எதிர்கொண்ட அதே பார்முலாவை ஜெயலலிதா ரொம்பவும் விரும்புகிறாராம்

எல்லாத்துலயும் அம்மா லேபிளை ஒட்டிடீங்க. அப்படியே ஓட்டு பொட்டியிலயும் தேர்தல் அதிகாரி நெத்தியிலையும் ஒட்டிடிங்கன்னா ஈசியா ஜெயிச்சிடலாம்......... 
ஒன்றரை ஆண்டுக்குள் தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் வர இருப்பதால், தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சிக்காரர்களை பணித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதனால், தமிழகம் முழுவதும் கட்சிக்காரர்கள் பலரும், இப்போதே தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டதாக, கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., யாரும் எதிர்பாரத வகையில் நாற்பது தொகுதிகளில் போட்டியிட்டது. நாற்பது தொகுதிகளையும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என, ஓராண்டுக்கு முன்பாகவே, கட்சியினரை உசுப்பி விட்டார் ஜெயலலிதா.இதனால், கட்சியினர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, களப் பணியாற்றினர். கூடவே, அரசு அதிகாரிகளும், அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, பல வழிகளிலும் முடுக்கி விடப்பட்டனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை எதிர்கொண்ட, அதே பார்முலாவின் அடிப்படையில், 2016 சட்டசபை தேர்தலை யும் சந்திக்க விரும்புகிறார் முதல்வர். ரொம்ப சரி ! இந்த வாட்டி பிரவீன் குமார் ஒதுங்கிடுவார் ? இந்த சங்கினி போனால் வேறொரு கிண்கிணி வராமலா போய்விடும் ? இது ஒன்னுதாய்ன் நூறு சதவீத சக்சஸ் பார்முலா . தேர்தல கமிஷனோடு கூட்டணி வச்சு தேர்தலை சந்துப்போம்டோய் ?
அதற்காக இப்போதே கட்சியினரையும், அரசு அதிகாரிகளையும் விரட்ட ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து, மக்களுக்கு கொண்டு செல்ல, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, தமிழகம் முழுவதிலும் இருந்து, விவரங்கள் திரட்டப்பட்டு, அது அறிக்கையாக தனக்கு வைக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் குடிதண்ணீர் பிரச்னை இருக்கக்கூடாது என, உள்ளாட்சித் துறைக்கு உத்தரவிட்டிருக்கும் முதல்வர், அதே போல, மின் பிரச்னையும் விரைந்து தீர்க்க, மின் துறை அமைச்சருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தீவிரமாக கவனம் செலுத்தி, பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள, காவல் துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.சட்டசபைக் கூட்டத் தொடர்
முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், தினந்தோறும் கோட்டைக்கு வந்து, பணியாற்ற அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. வார இறுதியில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சொந்த மாவட்டத்துக்கு சென்று, அரசு விழாக்களில் பங்கேற்பதோடு, மக்களை நேரில் சந்தித்து, குறைகளை களையவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு:

கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், சொந்த தொகுதியில் தங்கியிருந்து, தீவிரமாக மக்கள் பணியாற்ற வேண்டும் என சொல்லியிருக்கும் முதல்வர், இதெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என, உளவுத்துறை போலீசார் கண்காணித்து அறிக்கை தரவும் உத்தரவிட்டிருக்கிறார். இதனால், தமிழகம் முழுவதும் கட்சியினர், இப்போதே, 2016 தேர்தல் பணியில் தீவிரமாகி விட்டனர்.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:லோக்சபா தேர்தலைப் போலவே, 2016 சட்டசபை தேர்தலையும் எதிர் கொண்டால், கட்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறார் முதல்வர்.லோக்சபா தேர்தலில் 'நாற்பதும் நமதே' என்று கோஷம் வைத்து, தேர்தலை சந்தித்தது போல, '234லிலும் நமதே' என்ற கோஷத்துடன் சட்டசபை தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., தயாராகி வருகிறது.இந்த முறையும் கட்சி, தனித்தேதான் போட்டியிடும். விரைவில், தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று, மக்களை சந்திக்கவும் முதல்வர் திட்டம் வைத்துஇருக்கிறார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக