ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

30 ஆயிரம் கோடிக்கு அறிவிப்பு 110 விதியின் கீழ் வெளியீடு ! எத்தனை நிறைவேத்துனாங்க.. எத்தனை பீலா பெண்டிங் இருக்கு..?

சமீபத்தில் முடிந்த, தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், சட்டசபை கூட்டத் தொடர் துவங்கினாலே, அனைவருக்கும், 110வது விதி நினைவிற்கு வந்து விடும். சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். இதன் மீது விவாதம் எதுவும் நடைபெறாது. எனவே, மக்கள் ஒவ்வொரு நாளும், 110 விதியின் கீழ் வெளியாகும் அறிவிப்பை, ஆவலுடன் எதிர்பார்ப்பர்.  தேர்தல் வருவதற்குள் $ 100,000 கோடியாகி விடும் கவலை வேண்டாம்... தோற்றால்க்கூட அடுத்து ஆட்சிக்கு வருபவர்களால் ஒன்றும் செய்ய முடியாது..
சமீபத்தில் சட்டசபை கூட்டத் தொடர், ஜூலை 10ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி நிறைவடைந்தது. இக்கூட்டத் தொடரில், தினமும் ஒன்று முதல், மூன்று துறைகள் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடந்தது. விவாதத்திற்கு, துறை அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஆனால், அந்த அறிவிப்புகள் அனைத்தும் பெயரளவிற்கே இருந்தன. முக்கிய அறிவிப்புகளை, முதல்வர் வெளியிட வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை முடிந்த பின், ஒரு நாள் கழித்து, முதல்வர் 110 விதியின் கீழ், துறை ரீதியாக, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்தக் கூட்டத் தொடரில், முதல்வர் 110 விதியின் கீழ், 41 அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றின் திட்ட மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய். அதிகபட்சமாக, தொழில் துறையில், 9,630.50 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படி துறை ரீதியாக வெளியான அறிவிப்புகள் விவரம் வருமாறு:வேலைவாய்ப்பு துறை, 57.99; ஊரக தொழில் துறை, 119.16; தொழில் துறை, 9,630.50; சத்துணவுத் துறை, 91.46; நெடுஞ்சாலைத் துறை, 2,325.48; மாற்றுத் திறனாளிகள் துறை, 2.98; தமிழ் வளர்ச்சித் துறை, 17.50; பள்ளிக் கல்வித் துறை, 374.34; விளையாட்டுத் துறை, 40.78; போக்குவரத்துத் துறை, 311.83; மின் துறை, 6,449.59 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.ஆதிதிராவிடர் நலத்துறை, 56.31; உணவுத் துறை, 222.17; கூட்டுறவுத் துறை, 37.04; உயர்கல்வித் துறை, 174.67; மீன்வளத் துறை, 59.70; பால்வளத் துறை, 46.50; பொதுப்பணித் துறை, 670.05; வேளாண் துறை, 794.14; நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 5,569.62; ஊரக வளர்ச்சித் துறை, 1,519.04 கோடி ரூபாய்க்கு, அறிவிப்புகள் வெளியானது.

பொதுத் துறை, 161.16; வனத் துறை, 148.45; தகவல் தொழில்நுட்பத் துறை, 46.70; வருவாய் துறை, 45; சிறைத் துறை, 27.16; நீதித் துறை, 39.55; சுகாதாரத் துறை, 346.34; இந்து சமய அறநிலையத் துறை, 163.84; தொழில் துறை, 127.13; வணிகவரித் துறை, 206.38 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது. பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழாவையொட்டி, அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், பயிற்சி மருத்துவர்களுக்கு, உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கு மட்டும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்புகளுக்கு, இன்னமும் அரசாணை வெளியிடப்படவில்லை. அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கிய பின், பணிகள் துவக்கப்படும்.எப்படி அறிவிப்பு வெளியிட்டால் என்ன, திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்தால் போதும் என்கின்றனர், பொதுமக்கள்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக