திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இந்தியாவில் மது அருந்தி தற்கொலை செய்வதில் தமிழகம் முதலிடம் !

சென்னை : 2013 ஆண்டில் அதிகளவு மது அருந்தி தற்கொலை செய்து கொண்டவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று தேசிய ஆவண குற்றக்காப்பாக அறிக்கை தெரிவிக்கிறது.  தமிழகத்தில் 3 பெண்கள் உட்பட 262 பேர் அதிகப்படியாக மது அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து அரசு மருத்துவமனை மன நல மருத்துவர் ஒருவர் கூறியதாவது: வாழ்க்கையில் பலவற்றை எதிர்பார்த்து வாழ்கிறோம்.இதனால் மன அழுத்தத்தின் காரணமாக தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மது அருந்துகின்றனர். அவ்வாறு தொடர்ச்சியாக மது அருந்துபவர்கள் காலப்போக்கில் மதுவுக்கு அடிமையாகின்றனர். அதுபோன்ற கால கட்டத்தில் சாதாரண பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக