திங்கள், 25 ஆகஸ்ட், 2014

களஞ்சியம் உயிரை காப்பாத்த அஞ்சலியிடம் கெஞ்சும் களஞ்சியம் தரப்பு !

அஞ்சலி எப்படி சென்னை வருகிறார் பார்க்கிறேன்.. என் படத்தில் நடிக்காவிட்டால் எந்த மொழிப் படங்களிலும் நடிக்க முடியாது என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த இயக்குநர் களஞ்சியம், இப்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளார். அவரது உயிரைக் காப்பாற்றும்படி நடிகை அஞ்சலிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் களஞ்சியம் தரப்பினர். இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லையாம். யாரைப் பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே அவருக்குத் தெரிகிறதாம். இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை. அஞ்சலி நடித்த ஊர்சுற்றிப் புராணம் படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்களாம்.  இந்த காலத்துல செய்ஞ்ச வினைக்கெல்லாம் சீக்கிரமாகவே பலன் கிடைக்கறது ! இன்னா பண்றது சீக்கிரம் குணமாக பிரார்த்திக்கிறோம்   ?
அதுவேறு இல்லாமல் களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி சிலர் கடனைக் கேட்டு நெருக்குகிறார்களாம். இந்த நெருக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து அஞ்சலி பணம் கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்க முடியும். இதற்கான முயற்சியில் திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும் என்று அவர் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கும் அறிக்கை அனுப்பி வருகிறார்கள். தன் சொத்துகளை சித்தி பாரதி தேவியுடன் சேர்ந்து அபகரித்தார், தன்னைத் துன்புறுத்தினார் என்று களஞ்சியம் மீது அஞ்சலி புகார் கூறியது நினைவிருக்கலாம். அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் நடிக்க பணம் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் களஞ்சியம் உயிரைக் காக்க பணம் கொடுங்கள் என்று அவர் தரப்பில் கேட்டுள்ளது விநோதமான கோரிக்கையாக உள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக