திங்கள், 25 ஆகஸ்ட், 2014

திருப்பூரில் சுமார் 700 நைஜீரியர்களால் மக்கள் கடும் அவதி ! விசா. வொர்க் பெர்மிட் இல்லை ! லஞ்ச அதிகாரிகள் அலட்சியம் ? ?

திருப்பூரில் வாடகைக்கு வீடுகளைப் பிடித்து தங்கி வேலை பார்த்து வரும் நைஜீரியர்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாலும், திருட்டு, அடிதடி என அவர்கள் ஈடுபட்டு வருவதாலும், அவர்களை 10 நாட்களுக்குள் திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டுள்ளனர். தமிழர்களுக்கு உள்ளூரிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்த நிலையில் தற்போது வெளிநாட்டினராலும் கூட உள்ளூர் தமிழன் ஒப்பாரி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் தங்கியுள்ள 700க்கும் மேற்பட்ட நைஜீரியர்களால் அந்த ஊர் மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நைஜீரியர்களுக்கு எதிராக திருப்பூர் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
திருப்பூர் காதர்பேட்டை, ராயபுரம், விநாயகபுரம், பேங்க் காலனி, ரங்கநாதபுரம், பெத்திசெட்டிபுரம், சூசையாபுரம், குமரப்பபுரம் ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் பனியன் உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நைஜீரியர்களில் பலரும் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பெண்களிடம் வம்பிழுப்பது, குடித்து விட்டு வந்து அவர்களுக்குள் மோதிக் கொள்வது, திருடுவது என சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.
இவர்கள் மீது வந்த புகார்களின் அடிப்படையில் 10 பேரை போலீஸார் கைதும் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெளிநாட்டவர் என்பதால் சட்டம் ஒரு அளவுக்கு மேல் கடுமையாக இல்லை. இதனால் இவர்களின் கொட்டம் அடங்காமல் உள்ளது.
இவர்களின் அட்டகாசத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதையடுத்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று, ராயபுரம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தாமோதரன் (அ.தி.மு.க.,), ராமகிருஷ்ணன், கலாமணி (தி.மு.க.,), அய்யன்பன், மாரிமுத்து, முல்லை பாண்டி (ம.தி.மு.க.,), கார்த்திக் (பா.ஜ.,) மற்றும் பலர் பங்கேற்றன
அப்போது, ரோட்டில் செல்லும் பெண்களை மறித்து தொந்தரவு செய்வது, தனியாகச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தருவது, குளியலறையை எட்டிப்பார்ப்பது, பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது என பல்வேறு செயல்களில் நைஜீரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. மது குடித்துவிட்டு ரோட்டில் வேகமாக வண்டி ஓட்டி அடிக்கடி விபத்து ஏற்படுத்துகின்றனர்.
அவர்கள் வைத்திருக்கும் பாஸ்போர்ட், விசா உண்மையானதுதானா ? முறைகேடாக தங்கியுள்ளனரா ? என போலீசார் ஆய்வு செய்வதில்லை. மேலும், பல நைஜீரியர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு மது பார், டான்ஸ் கிளப் நடத்துகின்றனர்.
இப்படி நடப்பதன் மூலம் இக்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குரியாகிறது. வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்த நைஜீரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது
10 நாள் டைம் இறுதியில், நைஜீரியர்களுக்கு வீடு, கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ளவர்கள் அவர்களை 10 நாட்களுக்குள் காலி செய்யச் சொல்வது, நைஜீரியர்களுக்கு இனி கட்டடங்களை வாடகைக்கு கொடுத்தால் மாநகராட்சி, மின்வாரியம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுப்பது, நைஜீரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்புவது என திருப்பூரில் தங்கியுள்ள நைஜீரியர்களுக்கு எதிரான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more at: tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக