திங்கள், 25 ஆகஸ்ட், 2014

18 சட்டமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி !

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகவே கருதப்படும். பீகார், கர்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். < நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய சரிவை கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக