வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மீண்டும் கந்து வட்டி கும்பல் ? 30 லட்சம் கொடுத்து 70 லட்சம் வசூல் !

30 லட்சம் கடன் கொடுத்து 70 லட்சம் வசூல்: சென்னையில் கந்துவட்டிக்காரர் கைது ரூபாய் 30 லட்சம் கடன் கொடுத்துவிட்டு, ரூபாய் 70 லட்சம் வசூ-த்த கந்துவட்டிக்காரர் சாந்தகுமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.பம்மலைச் சேர்ந்த இவர் மீது, சுபா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெற்றுப் பத்திரத்தில் சுபாவிடம் இவர் கையெழுத்து வாங்கியதும், அதன் மூலம் பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சாந்தகுமாரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக