செவ்வாய், 8 ஜூலை, 2014

Carrefour வெளியேறுகிறது ! சில்லறை வர்த்தகத்தில் அனுமதியில்லை !

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியில்லை என்ற அரசின் முடிவால் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான கேர்ரேபோர் இந்தியாவிலிருந்து நடையை கட்டுகிறது.> பா.ஜ.க அரசின் இந்த அதிரடி முடிவால் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் அக்கம்பெனியின் ஐந்து கேஷ் அண்டு கேரி கடைகளை மூட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. வரும் செப்டம்பர் 2014ல் இந்நிறுவனத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவரை சப்ளையர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அந்நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இத்தகவலை அந்த நிறுவனம் தங்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவால் சிறு குறு வணிகர்களின் எதிர்காலம் காக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக