செவ்வாய், 8 ஜூலை, 2014

ஜெயாவின் by product சசிகலா நடராஜன் புழல் சிறையில் அடைப்பு !

சென்னை: குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, சசிகலாவின் கணவர் நடராஜனை, சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல், கொலை மிரட்டல் விடுத்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம்உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்.முதல்வர் ஜெயலலிதாவின், நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது, கராத்தே மாஸ்டரும், சிற்ப வல்லுனருமான ஹூசைனி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு அளித்து இருந்தார். 
அடடே இது ஒரு குடும்ப பிரச்னையாமே கலைஞரின் குடும்ப பிரச்னையைமட்டும் அலசு அலசு என்று ஆளாளாளுக்கு வயது வித்யாசமின்றி தகுதி் தராதரம் இன்றி விமர்சிக்கலாம் சசி உறவு பற்றி விமர்சிக்க்கூடாதா என்னப்பா நியாயம் இது? இன்னும் ரெண்டே நாளில் வெளியே வந்து அறிக்கை விடுவார். இவர் என்ன தொழில் செய்கின்றார் ?இவருக்கு எப்படி கோடி கணக்கில் சொத்து ? எல்லாம் ஜெ மற்றும் சசிக்கே வெளிச்சம்


அதில், அவர் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டம், விளாரில், முள்ளி வாய்க்கால் முற்றத்தில், 98 லட்சம் ரூபாய் செலவில், 'மறுமலர்ச்சி கரங்கள்' அமைக்க, சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது நெருங்கிய நண்பர் இளவழகன், 'ஏர்போர்ட்' மூர்த்தி உள்ளிட்டோர் ஒப்பந்தம் போட்டனர்.பணிகள், 90 சதவீதம் முடிவு அடைந்த நிலையில், 75 லட்சம் ரூபாயை தந்த நடராஜன், மீதி, 23 லட்சம் ரூபாயை தர முடியாது என்றார். இதனால், பணியை நிறுத்தி விட்டேன்.

இந்நிலையில், மீதி பணத்தை தருவதாக அழைத்ததால், நேரில் சென்றேன். அங்கு நடராஜன், இளவழகன், கார்த்தி மற்றும் இந்தி பேசிய நபர் ஒருவர் இருந்தார்.திடீரென அவர்கள், பணியை துவங்குமாறு மிரட்டினர். 'மீதி பணத்தை தந்தால் தான், மறுமலர்ச்சி கரங்கள் நிறைவு பெறும்' என, தெரிவித்தேன். ஆத்திரம் அடைந்த அவர்கள், ஒரு பாட்டிலை எடுத்து வீசியதில், கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது. நடராஜன், துப்பாக்கியை காட்டி, 'சுட்டுக் கொன்று விடுவேன்' என, மிரட்டினார். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து, உயிர் பிழைத்து உள்ளேன். பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். குற்றச்சாட்டு உண்மை என, தெரிய வந்ததால், குற்றாலத்தில் உள்ள சொகுசு பங்களாவில் ஓய்வில் இருந்த நடராஜனை, நேற்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, 'ஏர்போர்ட்' மூர்த்தி, இளவழகன், கார்த்தி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக