செவ்வாய், 8 ஜூலை, 2014

பார்வதி நாயரை கமலஹாசன் காப்பாற்றினாரம் ? நடிகனை புகழ்வதே வேலை ?

உத்தம வில்லன் திரைப்படம் மிக வேகமாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கமல்ஹாசனும் இளம் நடிகையான பார்வதி நாயரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சீனியர் நடிகரான கமல்ஹாசன் புதிய நடிகர்களுக்கு எப்படி நடிப்பின் நுணுக்கங்களை கற்றுத் தருவாரோ, அதேமாதிரி பார்வதி நாயருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். கமலின் சகஜமான அணுகுமுறையால், பெரிய நட்சத்திரத்துடன் நடிக்கிறோம் என்ற படபடப்பு இல்லாமல் இயல்பாகவே நடித்திருந்திருக்கிறார் பார்வதி நாயர்அப்படி இருந்தும் படப்பிடிப்பின் போது ஒரு சமயத்தில், கால் தடுக்கி கீழா விழுந்துவிட்டாராம் பார்வதி நாயர். கீழே விழுந்த அதிர்ச்சியால் எழ முடியாமல் கீழே கிடந்த பார்வதியை, கமல்ஹாசன் ஓடி வந்து தூக்கிவிட்டாராம். கமலின் இந்த சகஜ நடவடிக்கையால் மகிழ்ச்சியுற்ற பார்வதி, இந்த படத்தைப் பற்றிப் புகழவும் மறப்பதில்லையாம். உத்தம வில்லனில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் போல் வேறெந்த கதாபாத்திரமும் தனக்கு இனி அமையாது என்கிறாராம் ‘நிமிர்ந்து நில்’ நடிகை பார்வதி நாயர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக