வியாழன், 24 ஜூலை, 2014

கேரள சிறுமியை மயக்கி திருமணம்: சென்னை டிரைவர் கைது ! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளிவந்த உண்மை !


கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டம் பறப்பாங்காடி பகுதியை சேர்ந்தவர் பைஜூ. இவரது மகள் குஞ்சாலி.
15 வயதான குஞ்சாலி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திடீரென மாயமானார். இதையடுத்து பைஜூ பல இடங்களிலும் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டு பிடிக்க முடியில்லை.
இது பற்றி அவர் பறப்பாங்காடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் குஞ்சாலி எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பது தெரியாமலேயே இருந்தது.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த லாரி டிரைவருக்கும், குஞ்சாலிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. குஞ்சாலியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்ணை வைத்து அவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் குஞ்சாலியின் பெற்றோர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் உதவியையும் நாடினார்கள்.

அந்த டி.வி.குழுவினர் சென்னை பாடி, புதூரில் வசிக்கும் லாரி டிரைவர் ராஜா பாபு (32) வசம் குஞ்சாலி இருப்பதை கண்டு பிடித்தனர். அப்போது அவர் ராஜாபாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தாள்.
இதையடுத்து கேரளாவில் இருந்து குஞ்சாலியின் தந்தை மற்றம் சகோதரர் வரவழைக்கப்பட்டனர். இதே போல் ராஜாபாபு, அவரது அண்ணன், அண்ணி ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் டி.வி.நிகழ்ச்சி மூலம் தங்கள் நிலையை விளக்கினார்கள்.
குஞ்சாலி கூறும் போது, தன் மீது பெற்றோர் கவனம் செலுத்தாமல் இருந்தனர். லாரி டிரைவருடனான சந்திப்பும், பேச்சும் ஆறுதலாக இருந்தது. இதனால் அவரிடம் அடைக்கலம் புகுந்த விட்டதாக தெரிவித்தார். 15 வயது சிறுமி என்பதால் குழந்தை தனமாகவும், மழலை பேச்சுடனும் காணப்பட்டாள்.
ராஜா பாபு கூறும் போது, நான் அடிக்கடி லாரியில் கேரளா சென்று வருவேன். அப்போது குஞ்சாலியை சந்தித்தேன். எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. நான் அவளை தொடர்ந்து படிக்க வைப்பதாக கூறி அழைத்து வந்தேன். இங்கு கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். அவளை என்னால் பிரிய முடியாது. அவருடன் தான் வாழ்வேன் என்றார்.
ஆனால் குஞ்சாலி மைனர் பெண் என்பதால் அவள் விரும்பியே திருமணம் செய்தாலும் அது சட்டப்படி குற்றம். எனவே இந்த திருமணம் செல்லாது என்று ராஜா பாபுவுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இறுதியாக குஞ்சாலியிடம் உனக்கு கணவர் வேண்டுமா? அல்லது தந்தையுடன் செல்கிறாயா? என்று கேட்டதற்கு மனம் மாறி தந்தையுடன் செல்லும் முடிவை எடுத்தாள். தன்னை பெற்றோருடன் செல்ல விடாமல் தடுப்பதற்காக ராஜா பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போய் தந்தையை வெறுத்து பேசியதாக குஞ்சாலி கூறினாள்.
கடைசியில் தந்தை பாசத்தை மறக்க முடியாதவளாய் குழந்தை தனத்துடன் சென்று தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு அவருடன் சென்றாள்.
இதற்கிடையே மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் ராஜாபாபுவை தேடி வந்த கேரள போலீசார் இந்த டி.வி. நிகழ்ச்சியை பார்த்து விட்டு உடனடியாக சென்னை வந்தனர்.
பாடி புது நகரில் தங்கி இருந்த ராஜா பாபுவை ஜெ.ஜெ. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி உதவியுடன் கைது செய்தனர். அவர் மீது மைனர் பெண்ணை ஏமாற்றி கடத்தி வந்து திருமணம் செய்ததாகவும, வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக