வெள்ளி, 11 ஜூலை, 2014

சென்னை மாணவி பல்கலைகழக விடுதியில் தற்கொலை ? மாணவி பெயர் ஹேமலதா !

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் மகள் ஹேமலதா (21). இவர் செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பி.இ. மூன்றாமாண்டு படித்து வந்தார். இதற்காக அந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் ஹேமலதா தங்கியிருந்தார்.
 வெள்ளிக்கிழமை காலை ஹேமலதா அறை பூட்டியே கிடந்தது. இந்நிலையில் வகுப்புக்கு செல்வதற்காக ஹேமலதாவின் தோழிகள், அவரது அறைக்கு வந்தனர். அப்போது அறை கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக அறையை பார்த்தனர்.
 அப்போது ஹேமலதா,  மின்விசிறியில் தூக்கிட்டு இறந்துகிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள், செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஹேமலதா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மீடியாக்கள் எல்லாம் பொத்தாம் பொதுவாக செம்மஞ்சேரி தனியார் பலகலை கழக விடுதியில் மாணவி தற்கொலை என்று கூறுகின்றன .அந்த மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்காமலே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டார்கள் , நிச்சயமாக சந்தேகத்திற்கு இடம் இருக்கிறது , மீடியாக்கள் எவ்வளவு பணம் அந்த நிர்வாகத்திடம் வாங்கியிருப்பார்கள் ?அது எந்த ஸ்தாபனம் என்று சொல்லவே மறுக்கும்  மீடியாக்கள்

 மேலும் அந்த அறையில் இருந்து ஹேமலதா எழுதிய ஒரு கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், தனது இறப்புக்கு குடும்ப பிரச்னையே காரணம் என்று குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  விசாரிக்கின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக