புதன், 23 ஜூலை, 2014

அஞ்சலிக்கு அழகான BMW கிடைத்தது ! காதலன் கொடுத்ததாம் !


அஞ்சலியின் சீக்ரெட் காதலர் அவருக்கு சொகுசு காரை பரிசளித்துள்ளார்.சித்தி பாரதி தேவியின் கொடுமை தாங்காமல் திடீரென கடந்த ஆண்டு மாயமானார் அஞ்சலி. 5 நாட்களுக்கு பிறகு அவர் மும்பையிலிருந்து திரும்பி ஐதராபாத் போலீசார் முன் ஆஜர் ஆனார். அதற்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து, தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தார். தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒருவரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பதாகவும் அவரையே காதலிப்பதாகவும் தகவல் பரவியது. திடீரென காதலரை அவர் மணந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருமண செய்தியை அஞ்சலி மறுத்தார்.
இந்நிலையில் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் 2 படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் படப்பிடிப்புக்கு புதிதாக வாங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரில்தான் வருகிறார். இந்த காரை அவருக்கு அவரது காதலர்தான் பரிசளித்துள்ளார் என டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அஞ்சலி ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் தனது காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார். அது பற்றி பேச அவருக்கு விருப்பமில்லை. நீண்ட நாட்களாக வைத்திருந்த பழைய காரை அவர் விற்றுவிட்டார். அவரது காதலர் பரிசளித்த சொகுசு காரில்தான் இப்போது ஷூட்டிங், பார்ட்டி, விழாக்களுக்கு வருகிறார் என டோலிவுட்டை சேர்ந்த ஒரு டெக்னீஷியன் கூறினார்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக