புதன், 23 ஜூலை, 2014

3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய ஆசிரியை: CCTV Evidence


மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஹவுஸ் பகுதியில் டியூசன் ஆசிரியர் பூஜாசிங், 3 வயது குழந்தைக்கு வீட்டிற்கு சென்று டியூசன் எடுத்து வந்துள்ளார். டியூசன் எடுத்த பூஜா சிங் குழந்தையை அந்த வீட்டின் படுக்கை அறையில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கியிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை கட்டிலில் தூக்கி போட்டு அடிக்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.சம்பவம் நடைபெற்றபோது சிறுவனின் தாயார் அங்கு இல்லை. இந்நிலையில் அவர்கள் பெற்றோர் சி.சி.டி.வி. வீடியோவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது உடனடியாக அவர்கள் போலீசாருக்கு செல்ல தயாராகியுள்ளனர். அப்போது பூஜா சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரை பெற்றோர்கள் பலமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக