ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஸ்ரீ ரங்கத்தில் ஆடி அமாவாசை ! மாநகராட்சி குழாயில் திதி கொடுத்த பக்தர்கள் !

திருச்சி - சிறீரங்கத்தில்  நேற்று (26.7.2014) ஆடி அமாவாசையையொட்டி, பக்தர்கள் அம்மா மண் டபம் படித்துறையில் தனது முன்னோர்களுக்கு மூடச்சடங்குக்கான திதி கொடுத்து வழிபட்ட பின்னர், காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் திருச்சி மாநகராட்சி சார்பில் அமைக்கப் பட்டிருந்த குழாயில் புனித நீராடினார்களாம்!
ஆடி அமாவாசையை யொட்டி நேற்று சிறீரங்கம் அம்மா மண்டபம் காவிரி மற்றும் சிறீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆறு ஆகிய இடங்களில் ஏராளமா னோர் தங்கள் குடும்பத் துடன் வந் திருந்து புனித நீராடி, படையல் இட்டு மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனராம்! காவிரி ஆறு வறண்டு காணப்பட்டதால் பொது மக்கள் புனித நீராடுவதற் காக திருச்சி மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நீண்ட    குழாய் மூலம் செயற்கை முறையில் நீர் வெளியேற் றப்பட்டது. இந்த குழாய் நீரில் பக்தர்கள் குளித்து விட்டு காவிரி கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனராம்!

திதி கொடுப்பதற்காக ஏராளமான பொது மக்கள் குவிந்ததால் மாம் பழச்சாலையிலிருந்து ரெங்கநாதர் கோவில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத் தவும், அசம்பாவிதங் களைத் தடுக்கவும் சிறீரங் கம் காவல்துறை உதவி ஆணையாளர் கபிலன் தலைமையில் ஆய்வாளர் சிவசுப்ரமணியன் மேற் பார்வையில் ஏராளமான காவலர்கள் மற்றும் ஊர்க் காவல் படையினர் ஈடு படுத்தப்பட்டிருந்தனராம்!
.viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக