புதன், 23 ஜூலை, 2014

ஐ .நா : இந்திய மக்கள் பெண் குழந்தைகளை பாரமாக கருதுகின்றனர் !

புதுடெல்லி: சரியான மாப்பிள்ளை கிடைக்க வேண்டும், அதிக  வரதட்சணை தர வேண்டும் போன்ற சமூக காரணங்களால் பெண்  குழந்தைகளை இந்திய பெற்றோர் `பாரமாக‘ பார்க்கின்றனர் என்று ஐ.நா.  வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையில்  கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: தற்போதுள்ள பொருளாதார, சமூக  நிலைமையில் தனது மகளுக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்க  வேண்டும், அதிக வரதட்சணை தர வேண்டும் போன்றவையே இந்திய  பெற்றோரின் கவலையாக உள்ளது. அதனால் பெண் குழந்தைகளை  பாரமாக பார்க்கின்றனர். அதேநேரத்தில் பெண் குழந்தைகளை  முழுமையாக அவர்கள் வெறுப்பதில்லை. இரண்டு குழந்தைகள் இருக்க  வேண்டும், அதில் ஒன்று ஆணாக இருக்க வேண்டும் என்றே  விரும்புகின்றனர்.  அடேயப்பா கண்டுபிடிச்சான் பாரு கொலம்பஸ் ! நாமதான் மாங்கல்யான் எல்லாம் செவ்வாய்க்கு அனுப்பிட்டம்ல ? இப்ப போயி இதெல்லாம் பேசிகிட்டு ....
முதல் குழந்தை பெண்ணாக இருந்தால், அடுத்து கருவுறும்போது அது  என்ன குழந்தை என்பதை ஸ்கேன் செய்து பார்க்கின்றனர். லஞ்சம்  கொடுப்பது உள்பட பல்வேறு வழிகளில் அது என்ன குழந்தை என்பதை  தெரிந்து கொள்கின்றனர். அதுவும் பெண்ணாக இருந்தால் கருகலைப்பு  செய்து விடுகின்றனர். பல வட மாநிலங்களில் இது தொடர்கிறது. இது  போன்ற காரணங்களால் ஆண்-பெண் விகிதாசாரம் வெகுவாக குறைந்து  வருகிறது. 1961ல் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்று இருந்த  நிலைமை, 2001ல் 927, 2011ல் 918 என்று குறைந்துவிட்டது. இது  மேலும் குறைவதை தடுக்க வேண்டும் என்று அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக